Asianet News TamilAsianet News Tamil

'கொரோனா' வைரஸ் பீதி... சீனாவில் இருந்து கோவை திரும்பிய தமிழர்கள் 8 பேருக்கு அதிர்ச்சி..!

தற்போது கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை கோவை சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. அதேபோல சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

Eight Tamils Returning to China from coimbatore
Author
Tamil Nadu, First Published Jan 28, 2020, 12:54 PM IST

கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் அபாயம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பதாக எந்தவொரு அறிவிப்பும் அரசுத்தரப்பில் இருந்து வெளியாகவில்லை. Eight Tamils Returning to China from coimbatore

எனினும் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளை முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும்  மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் விமான நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீனா சென்று மீண்டும் இந்தியா திரும்பும் பயணிகளை முழுமையாக பரிசோதித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை, பொள்ளாச்சியை பகுதியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று  சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.

Eight Tamils Returning to China from coimbatore

அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் 8 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள்  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்றும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

Eight Tamils Returning to China from coimbatore

தற்போது கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை கோவை சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. அதேபோல சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios