விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாது என்ற விவரத்தை காது பட நம் பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா..?

பொதுவாகவே, விநாயகருக்கு அரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும்.இந்த நாளில் அதாவது அவருடைய பிறந்த நாளில், வீடு வீடாக சென்று அவருக்கு பிடித்த அரிசி மாவு  கொழுக்கட்டை வாங்கி உண்பார் விநாயகர்


 
இவ்வாறு நிறைய கொழுக்கட்டை வாங்கி உண்டபின், அன்றைய இரவு எலியின் மீது அமர்ந்துக்கொண்டு  உலா வருவாராம் விநாயகர். அவ்வாறு ஜாலியாக உலா வரும் போது, வழியில் இருந்த பாம்பை பார்த்த  உடன் எலி பயந்து போயுள்ளது. அப்போது கீழே விழுந்த விநாயகர் வயிற்றில் இருந்து கொழுக்கட்டை கீழே விழுந்துள்ளது. 

இதை எல்லாம் ஆகாயத்தில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டு இருந்த சந்திரன், பயங்கரமாக சிரித்து விட்டாராம். இதனை கண்ட விநாயகருக்கு அதிகமான கோபம் வந்துள்ளது. பின்னர் அதே கோபத்தில் இருந்த விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை எடுத்து சந்திரனை நோக்கி வீசி உள்ளார்.

இதனால் தான் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள். அவ்வாறு பார்த்தால் பாவம் வந்து சேறு என்றும், வாழ்வில் பல இகழ்வுகளை அடைவார்கள் என்றும் கூறப் பட்டு உள்ளது.

இதனை மீறி தவறாக யாராவது இன்றைய தினத்தை விநாயகரை பார்த்து விட்டால் அதற்கு  பிராயச்சித்தமாக ஸ்ரீமத்பாகவத்தில் சயமந்த கமணியை ஸ்ரீகிருஷ்ணர் திரும்பப்பெற்றார் என்ற கதையை அவர்கள் முழுவதும் கேட்க வேண்டும் என்பது ஐதீகம்.