முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாதாம்.. ஏன் தெரியுமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Sprouted Potatos : முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது ஏன் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

do you know why eating sprouted potatoes is bad for health in tamil mks

உருளைக்கிழங்கு நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். மார்க்கெட்டில் எந்த காய்கறி வாங்குறோமோ இல்லையோ மறக்காமல் உருளக்கிழங்கு வாங்குவோம். உருளைக்கிழங்கின் ஒரு நன்மை என்னவென்றால், இது மற்ற காய்கறிகளைப் போல சீக்கிரம் கெட்டுப்போகாது. அதனால் தான் அதிகளவில் இதை வாங்குகிறார்கள்.

ஆனால், ஆனால் நீண்ட நாள் அவை தானாக முளைக்க ஆரம்பித்து விடும். இது அலட்சியப்படுத்திவிட்டு நாம் அதை சமைக்கிறோம். ஆனால், அவ்வாறு செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். முளைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவது ஃபுட் பாய்சனுக்கு சமம். எனவே, முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது ஏன் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

முளைத்த உருளைக்கிழங்கு ஏன் ஆபத்து?: 

பொதுவாகவே முளைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சரியல்ல. குறிப்பாக, உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது. உண்மையில், உருளைக்கிழங்கு இயற்கையாகவே சோலைனன் மற்றும் காகோனின் ஆகிய இரண்டு நச்சு பொருட்கள் உள்ளன. இருப்பினும் ஆரம்பத்தில் உருளைக்கிழங்கில் அதன் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், பின்னர் இந்த உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கும் போது, அதில் உள்ள இந்த இரண்டு விஷத்தை தனிமங்கள் அளவும் அதிகரிக்க தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

இதையும் படிங்க:  உருளைக் கிழங்குகளை வெறுக்காதீர்கள்- இருதய நன்மைக்கு கிடைக்கும் அற்புதம்..!!

உணவு விஷமாகும்:

முளைத்த உருளைக்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். முளைக்கும்போது உருளைக்கிழங்கில் இருக்கும் கார்போஹைட்ரேட் மாவு சர்க்கரையாக மாறுகிறது. இது உடலில் நுழைந்தவுடன் இரத்தத்தின் அளவு அதிகரிக்கலாம். இது இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு. இதுதவிர, முளைத்த உருளைக்கிழங்கு செரிமான அமைப்பை பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, முளைத்த  உருளைக்கிழங்கை சாப்பிடுவது நமக்கு ஸ்லோ பாய்சன் ஆகும்.

இதையும் படிங்க:  சக்கரவள்ளிக் கிழங்கை தினமும் சாப்பிட்டா, இந்த நோய் பாதிப்பு வரவே வராது..!!

பச்சை உருளைக்கிழங்கையும் சாப்பிடக்கூடாது:

உருளைக்கிழங்கில் பச்சை நிறம் இருந்தால் அவற்றை சாப்பிடக்கூடாது. இதுதவிர, நீண்ட நாள் உருளைக்கிழங்கு வாங்கி வைத்திருந்து, அதன் மீது சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால் அதை தூக்கி எறிவது நல்லது. மீறி சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

உருளைக்கிழங்கு முளைப்பது தடுப்பது எப்படி?:

  • உருளைக்கிழங்கை எப்போதும் ஈரமான இடத்தில் வைக்காமல், உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு எப்போதும் இருண்ட மற்றும் குளிர்ந்த, காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.
  • காகிதப்பை அல்லது காட்டன் பேக் இருந்தால் அதில் உருளைக்கிழங்கை கட்டி வைக்கவும்.
  • உருளைக்கிழங்கை ஒருபோது வெங்காயத்துடன் வைக்க வேண்டாம்.
  •  அதுபோல உருளைக்கிழங்கு சூரிய ஒளியிலிருந்து விலைக்கு வையுங்கள். இல்லையெனில் அது முளைக்க ஆரம்பித்து விடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios