உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபடவில்லை என்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்தியம் மிகவும் முக்கியம். அப்படி அவர்கள் உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். உடலுறவு கொள்ளவில்லை என்றால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படலாம். இதனால், எளிதில் தொற்றக் கூடிய நோய்கள் ஏற்படக் கூடும். உடலுறவு கொள்பவர்களுக்கு உமிழ்நீரில் நோய் தோற்றை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் எத்தனை வழிகளில் உச்சக்கட்டம் அடைவார்கள்? ஆண்கள் அதற்கு என்ன வித்தை பண்ணனும் தெரியுமா?
ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படலாம். உடலுறவு கொள்ளும் போது உடலில் ஒருவிதமான உடற்பயிற்சி செய்த ஒரு திருப்தி தோன்றுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை சமநிலைப்படுத்துகிறது. இதனால், உடலுறவு கொள்ளுதல் வேண்டும் அப்படி உடலுறவு கொண்டால் இதய நோய்களின் பாதிப்பு குறைகிறது. உடலுறவு இல்லையென்றால், பெண்களின் பிறப்புறுப்பில் ஆரோக்கியம் குறைபாடு ஏற்படுகிறது. இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும். அடுத்த முறை உடலுறவில் ஈடுபடும் போது அதன் மீதான நாட்டம் குறையும் என்று சொல்லப்படுகிறது.
நீண்ட காலம் உடலுறவு கொள்ளவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேநேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, எண்டோர்பின் ஹார்மோன்கள் பெண்களுக்குள் அதிகரித்து கருப்பை சுருக்கம் அதிகரிக்கிறது. நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபடவில்லை என்றால், பாலியல் மீதான ஆசை குறையும் நிலை ஏற்படுகிறது. செக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்க வழக்கமான உடலுறவில் ஈடுபட வேண்டும். சீரான இடைவெளியில் உடலுறவு கொள்ளவில்லை என்றால் துணை உடனான உறவையும் பாதிக்கும்.
நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்படும். சிறுநீர் தொற்றும் ஏற்படாது.