Asianet News Tamil

உறவில் ஏற்படும் 10 பிரச்சனைகள் எப்படி இருக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்...

Do you know 10 problems in the relationship Get to know
Do you know 10 problems in the relationship Get to know
Author
First Published May 15, 2018, 4:23 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


எல்லோருமே சரியான, அன்பான மற்றும் மகிழ்ச்சியான உறவில் இருக்கவேண்டுமென விரும்புவார்கள். காதலில் விழுவது எளிதானது, ஆனால் காதலில் நிலைத்திருக்க முயற்சி மற்றும் புரிந்துகொள்ளுதல் அவசியம். தற்போதைய போட்டி நிறைந்த உலகில் மக்கள் மிகவும் மனஅழுத்தம் நிறைந்த குழப்பமான வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பது அரிதாகிவிட்டது. காதலர்களுக்கிடையே தவறான புரிந்துணர்வு (பல இணக்கமான ஜோடிகளையும் சேர்த்து) அதிகமாகிவிட்டது. இந்த உறவு சிக்கல்களுக்கு காரணம் பல சிறிய மற்றும் பெரிய பிரச்சனைகளாக இருக்கலாம்.
வேலை மட்டுமே காதல் இல்லை

வேலைக்கு தரப்படும் முன்னுரிமை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உறவுகளை இப்போது பாதிக்கிறது. வெற்றி என்பது உங்கள்

உறவுகளை இழந்து வருவதாக இருக்கக்கூடாது. அனைவரும் அவர்களுக்கான முன்னுரிமையை பெற வேண்டும். ஒன்றை விட மற்றொன்றிற்கு எப்பொழுதும் முக்கியத்துவம் தரக்கூடாது(தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை). இந்த இரண்டிற்கும் இடையில் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பது அவசியமாகும்.

உறவை விட ஈகோ முக்கியமானதாக மாறும்போது

இது ஒரு உறவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதில் மோசமானது என்னவெனில் சில உறவுகள் சரிசெய்ய முடியாத அளவிற்கு சிதைந்துவிடும். தம்பதியினருக்கு இடையில் சண்டை வருவது சகஜம்தான், சொல்லப்போனால் ஆரோக்கியமானதுதான். உண்மையான பிரச்சனையே இருவருக்கிடையில் ஈகோ ஏற்படும்போதுதான். இதை ஆரம்பித்திலேயே சரிசெய்யா விட்டால் அது உங்கள் உறவையே நொறுக்கிவிடும்.

நிகழ்காலத்தை விட கடந்த காலம் ஆதிக்கம் செலுத்தும்போது

உங்கள் துணையுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள். நிறைய உறவுகள் பாதிப்புக்குள்ளாவதற்கு காரணம் கடந்த காலத்தை பற்றி அதிகம் நினைப்பதே ஆகும்.உங்கள் கடந்த காலம் இருளாக இருந்திருந்தாலும், அழகாக இருந்திருந்தாலும் அது முக்கியமல்ல. உறவில் நிகழ்காலமே முக்கியமானது. கடந்த காலத்திலேயே வாழ்வது உங்கள் நிகழ்காலத்தை மட்டுமின்றி எதிர்காலத்தையும் பாதிக்கும்.

மற்றவர்கள் உறவில் நுழையும்போது

மற்றவர்களின் கருத்துக்கள் உங்கள் உறவை பாதிக்க அனுமதிக்காதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் நலம்விரும்பிகள் என அனைவரும் அவர்கள் சொந்த கருத்துக்களை கூறுவார்கள். அவர்களின் கருத்துக்களை கேளுங்கள், ஆனால் முடிவை உங்கள் மனதை கேட்டு எடுங்கள். மற்றொருவர் நீங்கள் தவறான உறவில் இருப்பதாக சொல்கிறார் என்பதற்காக உங்கள் துணையிடம் சண்டை போடாதீர்கள். உங்கள் துணை மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் அவர்களுக்கு ஆதரவாய் இருங்கள்.

பாதுகாப்பற்ற உணர்வு, இது மிகப்பெரிய பிரச்சனையாகும்

பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் பொறாமை பல காலமாக உறவுகளை சிதைத்து வருகிறது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் எதிர்பாலின நண்பர்கள் இருப்பது சகஜம்தான். ஆரோக்கியமான பொறாமை எப்போதும் வேடிக்கையானது மற்றும் நல்லதுதான், ஆனால் அதன் எல்லை எது என்பதை உணரவேண்டும். நிலைமை எல்லைமீறும் முன் உங்கள் துணையுடன் ஆலோசிப்பது நல்லது.
இடைவெளி

காதல் மற்றும் நம்பிக்கை ஒரு உறவுக்கு அடிப்படையாகும். இடைவெளி என்பது உங்கள் உறவை வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக

வைத்திருக்க உதவும். நிறைய உறவுகளில் அவர்களுக்கு தேவையான இடைவெளி கிடைக்காதபோது உறவுகள் வீழ்ச்சியடைகிறது. உங்களின் இருப்பு, அக்கறை மற்றும் அன்பு உங்கள் துணையை பாதிக்காத அளவில் இருக்கவேண்டும். உங்கள் துணையை நேசியுங்கள் ஆனால் அவர்களுக்கு தேவைப்படும் இடைவெளியை கொடுங்கள். அனைவருக்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ உரிமை உள்ளது.

சமரசம் ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது

அனைத்து உறவுகளுக்கும் சமரசம் தேவை. துரதிர்ஷடவசமாக பெரும்பாலும் அனைத்து உறவுகளிலும் சமரசம் என்பது ஒருவர் மட்டுமே செய்துகொள்வதாக இருக்கிறது. உங்கள் துணையை என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் என்று எண்ணாதீர்கள். உங்களின் உறவை பாதுகாக்க ஒருவர் மட்டும் நினைத்தால் போதாது. சமரசம் என்பது இரண்டு புறமும் இருக்கவேண்டும்.

உறவுகள் பொருள் சார்ந்ததாய் மாறும்போது

சிலர் தாங்கள் விரும்பும் நபர் ஆசைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கித்தர இயலாமல் போராடுவார்கள். உலகில் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொடுத்து ஒருபோதும் உண்மையான அன்பை வாங்க இயலாது. தற்காலிக பொருள்சார் இன்பம் எப்போதும் உங்கள் அழகான உறவை அழிக்க அனுமதிக்காதீர்கள்.

காதல் என்பது உடலுறவு மட்டுமல்ல

சிலர் உடலுறவிற்காகவே ஒரு உறவில் நுழைவார்கள். உடலுறவு என்பது உங்கள் காதலின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் அது ஒரு உறவின் அடிப்படையாக இருக்க முடியாது. உங்கள் துணையை மரியாதையுடன் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்.

உங்கள் நண்பர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் முன்பாக உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்றாதீர்கள்

உங்கள் துணை சில பலவீனங்களையும் குறைபாடுகளையும் கொண்டிருக்கலாம், ஆனால் அவற்றைப் பரிகசிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. சிலர் தங்கள் துணையை மற்றவர் முன் கிண்டல் செய்வதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். இது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் உங்கள் துணையை இது மிகவும் வேதனைப்படுத்தும்.

Follow Us:
Download App:
  • android
  • ios