உடலுறவு ஒருவர் மட்டுமே சார்ந்தது அல்ல என்ற நிலையில் இருவரின் மனம் ஒப்பிய ஒத்துழைப்பும் அவசியம். பலர் தங்கள் துணைக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கெஞ்சிக் கூத்தாடியாவது உடலுறவுக்கு இணங்கச் செய்ய முயற்சிப்பார்கள். நிர்ப்பந்தத்துக்கு பணிந்தோ மனம் இரங்கியோ ஒப்புக்கொண்டாலும் ஈடுபாடு இல்லாத உடலுறவில் நிறைவோ திருப்தியோ இருக்க வாய்ப்பில்லை

உடலுறவில் நிறைவு வேண்டுமா? - செய்ய வேண்டியது எது? தகாதது எது என சில இலக்கணங்கள் உள்ளன. இவை பெரிய கம்ப சூத்திரமும் அல்ல காம சூத்திரமும் அல்ல! இயல்பான நடைமுறையில் புரிந்துகொள்ளக்கூடியவைதான்.

உடலின் தன்மை

பெண்களின் உடலமைப்பு வழக்கமான இலக்கணங்களுக்கு உட்பட்டவைதான் என்றபோதும், பெண்ணுக்குப் பெண் உடல் நிலை சக்தி, ஆரோக்கியம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறத்தானே செய்யும். எனவே துணையின் உடல் தன்மை குறித்து அறிந்துகொள்வது அவசியம். எங்கு வலி ஏற்படும்? என்ன செய்தால் வலியை தவிர்க்கலாம்?

சமூக ரீதியான வெற்றிகளுக்கு மட்டுமன்றி காதல் மற்றும் காமம் சார்ந்த வெற்றிக்கும் பார்வைத் தொடர்பு முக்கியம். அக்கறையுடன் கூடிய கவனம் செலுத்திப் பார்ப்பதன் மூலம் ஒவ்வொரு நொடியிலும் துணையின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுவது ஆனந்தத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால் ஒரு கை ஓசையாக இயந்திரத் தனமாகிவிடும்.

உச்சகட்டம் அவசியம்

அடுத்ததாக புணர்தலில் ஏற்படும் உச்சம். அது ஏற்படாவிட்டால் பெண்கள் அவதியாகவும் அழுத்தமாகவும் உணர வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் விருப்பம் சார்ந்து அவர்களை உச்சம் அடையச் செய்ய என்ன வழி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும், இதற்கு காதோடுதான் நான் பேசுவேன் என்பது போல ரகசியப் பேச்சுகளும் கொஞ்சி விளையாடுவதும் அவசியம். மேலும் கொஞ்சி விளையாடுவதன் மூலம் பெண்களின் உணர்வுகளை தூண்டி உச்சம் அடையச் செய்ய முடியும்.

பெண்ணிடம் ஆணுக்கோ ஆணிடம் பெண்ணுக்கோ படுக்கையறையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உண்டு அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்கள், ஆசைகளை பொறுத்து மாறுபடலாம். சிலவற்றை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டாலும் வேறு சில வெளியிடத் தயக்கம் சார்ந்தவையாக இருக்கலாம். அந்தவகையில் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கும் படுக்கையறை ரகசியங்களும் உள்ளன.

தேவைகளை கூறுதல்

அக்கறை மிக்க சிறந்த உரையாடல் பாலுணர்வை சிறப்பாக தூண்டுகிறது. அது பாலுணர்வையும் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கையின் அன்றாடச் செயல்களின் போது மனைவியுடன் அக்கறையுடன் உரையாடுவது அவளை எந்த அளவிற்கு விரும்புகிறான் என அவன் கூறுவது மனதில் பதிந்தால் நெருக்கமான தருணங்களில் மனதளவிலும் தன்னவன் தன்னுடன் இருக்கிறான் என்ற பெண்ணின் நம்பிக்கை பாலுறவில் ஆனந்தத்தை அதிகரிக்கும்.