Asianet News TamilAsianet News Tamil

கொரோனா எதிரொலி..! அடுத்த டார்கெட்டே "இந்தியா" தான்..! பெரும் வியாபாரிகள் குஷியோ குஷி..!

சீனாவில் தயாராகி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஏராளம். அந்தவகையில் இந்தியாவிற்கும் அதிக பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

corona virus effects ie world investors shows invest in india and buying things from india
Author
Chennai, First Published Feb 12, 2020, 5:49 PM IST

கொரோனா எதிரொலி..! அடுத்த டார்கெட்டே "இந்தியா" தான்..!  பெரும் வியாபாரிகள் குஷியோ குஷி..! 

சீனாவில் உருவாகியுள்ள கரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த வைரஸ் உயிரற்ற பொருட்கள் வழியாகவும் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதே...

அதாவது சீனாவில் தயாராகி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஏராளம். அந்தவகையில் இந்தியாவிற்கும் அதிக பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருப்பதால் பொருட்கள் வழியாகவும் வைரஸ் தாக்கம் ஏற்படும் என அஞ்சும் பல நாடுகள் சீனாவிலிருந்து பொருட்களை பெற விருப்பம் இல்லாமல் இருக்கின்றது.

corona virus effects ie world investors shows invest in india and buying things from india

மேலும் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் செராமிக் கண்காட்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவிலிருந்து மிகக்குறைந்த அளவிலான நபர்களே கலந்து கொண்டு உள்ளனர். பொதுவாகவே "செராமிக் வியாபாரம்" என்றால் சீனாதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படும். ஆனால் "கொரோனா வைரஸ்" பாதிப்புக்கு பிறகு பெரிய அளவில் கலந்து கொள்ளாத காரணத்தினால் இந்த முறை இந்திய வியாபாரிகளுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளது.

corona virus effects ie world investors shows invest in india and buying things from india

அதன்படி பருத்திபட்டு, பேஷன் பொருட்கள், ஆயத்த ஆடைகள், செராமிக், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்க உலக நாடுகள் இந்தியா பக்கம் திரும்பி உள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தாலும்... சீனாவிற்கு உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார இழப்பும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios