அய்யோ... இது என்னடா வம்பா போச்சு... கொரோனா தொற்றால் ஆண்மை குறைபாடு ஏற்பாடுமா?

கொரோனா வைரஸ், ஆண்களின் விந்தணுக்களின் செயல்பாட்டை சேதப்படுத்தும். விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இதற்கு கொரோனா வைரஸ் மட்டுமே காரணம் என கூறிவிட  முடியாது. 

Corona infection can cause impotence

கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் மனிதனின் சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாக மட்டுமே ஆரம்பத்தில் அறியப்பட்ட நிலையில், இந்த வைரஸ் உடலின் பல பாகங்களை சேதப்படுத்துவது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி வருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸ் ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தும் ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

Corona infection can cause impotenceகொரோனா வைரஸ், ஆண்களின் விந்தணுக்களின் செயல்பாட்டை சேதப்படுத்தும். விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இதற்கு கொரோனா வைரஸ் மட்டுமே காரணம் என கூறிவிட  முடியாது. கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தங்கள் ஆகியவையும் காரணங்களாகும்,’ என்கின்றனர். மேலும், கொரோனா குறுகிய காலத்திற்கு மட்டுமே விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் பாதிப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

இது பாதிக்கப்படும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தி, எடை பிரச்னைகள், உணவு, அடிப்படை சுகாதார நிலைகள் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்தது, என்றும் அவர்கள் கூறுகின்றனர். விந்தணுக்களின் தாக்கமும் நோய்த்தொற்றின் தீவிரத்தை பொறுத்தது. நபரின் தொற்று அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால் அது தற்காலிக ஆண்மைக் குறைவுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நிரந்தர சேதம் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு  வருகிறது. 

Corona infection can cause impotence

பொதுவாக வைரஸ் காய்ச்சல்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் ஆரோக்கியமானதும் சில வாரங்களில் எண்ணிக்கை பெருகி விடும். ஆனால் கொரோனாவால் இழந்த ஆண்மையை மீட்க எவ்வளவு காலமாகும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. கொரோனாவில் இருந்து மீண்ட ஆண்கள் விதைப்பை வலியை அனுபவிக்கிறார்கள். எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios