Asianet News TamilAsianet News Tamil

மெல்ல மெல்ல நம்மை அழிக்கும் டீ ..! இனி குடிக்கலாமா..? முடிவு உங்கள் கையில்...!

அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மன நிலைக்கு கூட செல்கின்றனர்

coffee and tea habits is not good for health
Author
Chennai, First Published Feb 21, 2020, 7:21 PM IST

மெல்ல மெல்ல நம்மை அழிக்கும் டீ ..! இனி குடிக்கலாமா..? முடிவு உங்கள் கையில்...!

வெயில் காலமோ மழை காலமோ, காலையில் எழுந்த வுடன் டீ குடிப்பதும் மாலை நேரத்தில் டீ குடிப்பதும் வழக்கமாக வைத்திருப்பார்கள் பலர்.

அதிலும் ஒரு சிலர் ஒரு நாளைக்கு பல முறை டீ குடிப்பார்கள். ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் டீ குடிக்க வில்லை என்றால் அவர்களால் எந்த வேலையும் சரிவர செய்ய முடியாது. அந்த அளவிற்கு டீ குடிப்பதில் அடிமையாக இருப்பார்கள். இது ஒருபக்கம் இருக்க, அதிகமாக டீ காபி குடிப்பதும் எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.

குறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மன நிலைக்கு கூட செல்கின்றனர்

coffee and tea habits is not good for health

இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..?

அதிக அளவில் டீ எடுத்துக்கொள்வதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும்.

மேலும் டீ குடித்தால் அதில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது. புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும். கீமோ தெரபி நாம் கொடுக்கும் போது, சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், ஹீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்தி விடுகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios