Asianet News TamilAsianet News Tamil

கொரோனா எதிரொலி..!வைரலாகும் "மாஸ்க் அணிந்த பூனை" போட்டோ...!

மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று பல்வேறு முறைகளில் நடவடிக்கை எடுத்து வரும் தருணத்தில் மற்ற செல்ல பிராணிகளும் பாதிக்காதவாறு இருக்க மனிதர்கள் மட்டுமின்றி அவரவர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மாஸ்க் தயார் செய்து அணிவித்து உள்ளனர்.

cat weared mask and goes outside in china and the photograph goes viral in social media
Author
Chennai, First Published Feb 18, 2020, 5:48 PM IST

கொரோனா எதிரொலி..!வைரலாகும் "மாஸ்க் அணிந்த பூனை" போட்டோ...! 

உலகம் முழுவதும் தற்போது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது என்ற செய்தி தொடர்ந்து பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும்1800 பேருக்கும் மேலாக இறந்துள்ளனர் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்து உள்ளது. மேலும் வைரஸ் வருவதை தடுப்பதற்கு சீன அரசு நடவடிக்கை எடுத்தாலும் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ளது.

cat weared mask and goes outside in china and the photograph goes viral in social media

மேலும் மக்களுடன் நேரடி தொடர்பை தடுப்பதற்காக ரூபாய் தாளையும் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து வைரஸை நீக்குகின்றனர். பின்னர் மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று பல்வேறு முறைகளில் நடவடிக்கை எடுத்து வரும் தருணத்தில் மற்ற செல்ல பிராணிகளும் பாதிக்காதவாறு இருக்க மனிதர்கள் மட்டுமின்றி அவரவர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மாஸ்க் தயார் செய்து அணிவித்து உள்ளனர்.

அந்த வகையில் தற்போது செல்லப்பிராணி பூனை ஒன்றுக்கு மாஸ்க் அணிவித்து வெளியில் அழைத்து செல்லும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios