Asianet News TamilAsianet News Tamil

அடுத்த பிரச்சனையை இப்போதே கணித்த அபிக்யா ஆனந்த்..! டிசம்பர் முதல் மார்ச்-குள் காத்திருக்கும் பேராபத்து!

ஏற்கனவே இந்த ஆண்டு வைரஸ் தாக்கும் என கணித்தபடியே நடந்து வருவதால், அவர் கூறும் அனைத்தும் நடக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நம்புகின்றனர்.

Boy who predicted Covid-19 warns world of another severe outbreak
Author
Chennai, First Published Apr 9, 2020, 7:17 PM IST

2019 நவம்பர் முதல் 2020 ஆண்டு இடைக்காலம் வரையிலான காலக்கட்டத்தில் ஒரு விதமான வைரஸால்  பெரும் பாதிப்பு ஏற்படும் என பிரபல ஜோதிடர் அபிக்யா ஆனந்த் தெரிவித்து இருந்தார்.அதன்படியே தற்போது நடைபெற்று வருவதால்,அவர் தெரிவிக்கும் அடுத்தடுத்த கருத்துக்களை  மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். அதன் படி தற்போது வெளியிட்டு உள்ள புதிய வீடியோ ஒன்றில் பல புதிய கருத்தை பதிவு  செய்து உள்ளார்

Boy who predicted Covid-19 warns world of another severe outbreak

அதில்,

இதற்கு முன்னதாக தெரிவித்த படி,மே 30 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் குறைய தொடங்கும் என  தெரிவித்து இருந்தேன். ஆனால்... மேலும் சில நாட்கள் கழித்து ஜூன் 30 ஆம் தேதி தான் குறைய தொடங்கும். அதன் பின்னர் பெரும் பொருளாதார பிரச்சனை ஏற்படும். உணவுக்காக கூட திண்டாடும் நிலை ஏற்பட கூடும்.  இதனை சமாளிக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், விவசாயம் செய்ய மட்டும் எந்த தடையும் கொடுக்கக் கூடாது. அவர்கள் சமூக விலகளோடு தான் வேலை செய்வார்கள். ஜூன் மாதத்திற்கு  பிறகு ஏற்படும் பஞ்சத்தை போக்க இப்போதே விவசாயம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

நல்ல ஊட்டத்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொண்டால் தான் நோய் எதிர்ப்பு தன்மையை  வளர்த்துக்கொள்ள முடியும். வருங்காலத்துள் கொரோனாவை  விட மோசமான வைரஸ் பரவ வாய்ப்பு  உள்ளது என தெரிவித்த  ஜோதிடர் அபிக்யா ஆனந்த் பெரும் அதிர்ச்சி தரும் விதமாக 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2021ம் ஆண்டு மார்ச் வரை உலகம் மிக மோசமான ஒரு அழிவை சந்திக்க வாய்ப்பு உள்ளது என பெரும்  வெடிகுண்டையே போட்டு விட்டார்.

ஏற்கனவே இந்த ஆண்டு வைரஸ் தாக்கும் என கணித்தபடியே நடந்து வருவதால், அவர் கூறும் அனைத்தும் நடக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நம்புகின்றனர்.இந்த ஒரு வேளையில், இதை விட ஒரு பேரழிவு காத்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios