டெங்கு கொசுவை மலடாக்கி அதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் புதிய முறையை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுப் பிடித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அறிவியல் இயக்கத்தின் ஆய்வாளர்கள் கடிக்கும் தன்மை இல்லாத ஆண் ஏடிஎஸ் கொசுக்களை ஆய்வு கூடத்தில் வைத்து ஆய்வு செய்து உள்ளனர்

அப்போது, வால்பாஷியா என்ற கிருமியியை கொண்டு அந்த கொசுக்களை தாக்க செய்து உள்ளனர்

பின்னர் இந்த ஆண் கொசுக்களை வெளியில் பறக்கப்விடப்பட்டு உள்ளது. இந்த ஆண் கொசுக்கள் அடுத்த மூன்று மாத காலமாக பெண் கொசுவுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அந்த முட்டையிலிருந்து  கொசுக்குஞ்சுகள் பொரிக்கவில்லை. அதாவது அந்த கொசுக்களின் இனப் பெருக்கம் முற்றிலும் தடைப்பட்டு உள்ளது

இதன் மூலம் மலட்டு கொசுக்களை உருவாக்கிய டெங்கு கொசுவை வராமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் இதன் மூலம் அங்கு டெங்கு காய்ச்சல் வருவது வெகுவாக தடுக்கப்பட்டு உள்ளது. இது தங்களது ஆய்விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஆராய்சியாளர்கள தெரிவித்து உள்ளனர்

இந்த முறை மூலம், டெங்கு காய்ச்சல் பரவுவதை 80%  வரை குறைக்க  முடியும் என என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்