ஆண்களின் ஆண்மை பிரச்சனைக்கு தீர்வு ரெடி..! "இந்த 5 விஷயம்" போதும்..! 

பச்சை காய்கறிகள்..! 

இலைகள் கொண்ட பச்சை காய்கறிகளான செலரி மற்றும் கீரை போன்றவை நைட்ரேட்டுகளின் அதிக செறிவு காரணமாக அதிக நன்மை கொடுக்கும். பீட் சாற்றில் நைட்ரேட்ஸ் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நைட்ரேட்டுகள் வாசோடைலேட்டர்கள், அதாவது அவை இரத்த நாளங்களைத் திறந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 1998 இல் முதல் ED மருந்தை அங்கீகரிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, விறைப்புத்தன்மைக்கு நைட்ரேட்டுகளின் நன்மை விளைவுகள் குறித்த பல  அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன. 

டார்க் சாக்லேட்ஸ் 

ரத்த சுழற்சி சரியாக இல்லை என்றால் விறைப்புத்தன்மை பிரச்சினை வரும். டார்க் சாக்லெட்டில் ஃபிளாவனாய்டுகள் இயற்கையாக ஆக்ஸிஜனேற்றிகளாகும்.இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவக்கூடும், இவை இரண்டும் விறைப்புத்தன்மைக்கு காரணிகளாக இருக்கின்றன. எனவே ஆண்மை பிரச்சனைக்கு ஓர் நல்ல   தீர்வாக அமையும். 

பிஸ்தா 

மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து  தினமும் பிஸ்தா கொட்டைகளை சாப்பிட்டு வந்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை வராமல் தடுக்க முடியும். இதில் இருக்கக்கூடிய  ஆர்கிலைன் ரத்த நாளத்தை விரிவுப்படுத்தி,ரத்த ஓட்டம் அதிகரிக்க  செய்கிறது. இதன் மூலம்  விறைப்புத்தன்மை பிரச்சனை வராமல் தடுக்க முடியும். 

சிப்பி

சிப்பி எப்போதுமே ஒரு பாலுணர்வைக் கொண்டுள்ளது. ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தாது, துத்தநாகம் சிப்பிகளில் அதிக அளவில் உள்ளது. குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் விறைப்புத்தன்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே சிப்பி  மிகவும்  பயனுள்ளதாக இருக்கும். 

தர்பூசணி

தர்பூசணியில் "பைட்டோநியூட்ரியண்ட்ஸ்" எனப்படும் நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன. பைட்டோநியூட்ரியண்டுகளும் ஆக்ஸிஜனேற்றிகள். அவற்றின் நன்மைகளில் ஒன்று, விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் இரத்த நாளங்களை தளர்த்துவது. தர்பூசணி 92 சதவிகிதம் தண்ணீர் என்றாலும், மற்ற 8 சதவிகிதம் பாலியல் உணர்வுகளை தூண்டுவதற்கும், இதயத்திற்கும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.