Asianet News TamilAsianet News Tamil

ஆயுர்வேதத்தின் படி.. மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளக் கூடாதா? மருத்துவர்கள் சொல்லும் தகவல்!

ஆரோக்கியமான உடலுறவு மற்றும் திருமண வாழ்க்கையை அனைவரும் அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தின் படி.. உடலுறவு என்ற விஷயத்தில் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மேலும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 

Ayurvedic Facts about having sex during periods and pregnancy time ans
Author
First Published Oct 25, 2023, 12:02 AM IST

நமது ஆரோக்கியம் நன்றாக இருக்க, நமது வாழ்க்கை முறை சிறப்பாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை உள்ளடக்கியது தான். உடலுறவு உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. மேலும், இது திருமண வாழ்க்கையை பலப்படுத்துகிறது. இருப்பினும், ஆயுர்வேதம் பாலினம் தொடர்பான சில விதிகளை பரிந்துரைக்கிறது.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு பாதுகாப்பற்றதா?

ஆயுர்வேதத்தின்படி.. மாதவிடாய் வரும்போது பெண்கள் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது எண்டோமெட்ரியோசிஸை ஏற்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். இதன் பொருள் எண்டோமெட்ரியல் செல்கள் கருப்பைக்கு வெளியே வளரும். இது கருப்பைகள் அல்லது ஃபலோபியன் குழாய்களுக்கு பரவுகிறது. அந்தரங்க உறுப்புகள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்கிறது ஆயுர்வேதம். 

என்ன சொல்லுறீங்க! பெண்களின் உடலுறவுக்கும் மறதிக்கும் தொடர்பு?  அது எப்படி சாத்தியம்?

எடை

உடல் ஆரோக்கியமாக இருக்க, உடல் எடை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதிக எடை மற்றும் பருமனாக இருப்பவர்கள் உடலுறவை தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் அல்லது அதிக உணவுஉண்ட  பிறகு உடலுறவில் ஈடுபடாதீர்கள். சஇதனால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வு தலைவலி, செரிமான பிரச்சனைகள் மற்றும் இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கும். உங்கள் உடல்நிலை சரியில்லாதபோதும் அல்லது உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ வலுவாக இல்லாதபோதும் உடலுறவில் ஈடுபடாதீர்கள் என்கிறது ஆயுர்வேதம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

கர்ப்ப காலத்தில் உடலுறவு

கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக உடலுறவு கொள்ளக்கூடாது என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஒரு நபர் தனது ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். சி-செக்க்ஷன் செய்தவர்கள் குறைந்தது 5 மாதங்களும், சாதாரண பிரசவத்திற்கு 2-3 மாதங்களும் இடைவெளி விட்டு தான் உடலுறவுகொள்ளவேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல் மீண்டும் வர உதவுகிறது.

வயதானாலும் ஆண்மை குறையாமல் இருக்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்.!! எது தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios