இந்த ஆன்லைன் யுகத்தில் ஒரு கரண்ட் பில், கேஸ் பில், ஷாப்பிங், பேங்கிங், சினிமா, ரயில், பஸ், ஃப்ளைட் டிக்கெட் புக் செய்வது என அனைத்தும் விரல் நுனியில் நடந்து விடுகிறது. டேட்டிங் மட்டும் விதிவிலக்கா என்ன? அதற்கும் ஆன்லைன் தளங்கள் உள்ளன. ஆனால் அதில் கிடைக்கும் காதல் உண்மையானதுதானா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. 

கண்டவுடன் காதல் கனிவுடன் வளர ஒருவரையொருவர் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் டேட்டிங் தளங்கள் அதற்கு உதவுகிறதா என்பதுதான் கேள்விக்குறி. தனியாக இருப்பவர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் டேட்டிங் தளங்கள், செயலிகளின் கோர முகத்தை பாதிக்கப்பட்டவர்கள் விளக்குகின்றனர்.

திருமணமானவர்கள்

திருமணமானவர்களுக்கு இல்லறத்திற்கு அப்பாற்பட்டு தேவைப்படும் கேளிக்கைக்கு ஆன்லைன் டேட்டிங் தளங்கல் வடிகாலாக இருக்கின்றன. ஆன்லைன் டேட்டிங் தளத்தின் மூலமாக அறிமுகமான ஆணுடன் சில முறை டேட் செய்த பெண், பின்னாட்களில் தான், அந்த நபர் தனக்கு திருமணமான உண்மையை கூறியதாகக் கூறுகிறார். கணவர் வேறு பெண்களுடன் டேட் செய்வது அவரது மனைவிக்கு தெரியாது

கேசுவல் செக்ஸ்!

ஆன்லைன் டேட்டிங் தளங்களில் நுழைபவர்கள் பலர் டெக்ஸ்ட்டிங், செக்ஸ்டிங், கேசுவல் செக்ஸ் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க மட்டுமே வருகின்றனர். இந்த தலைமுறையில் ஓரிரவு மையங்கள் பெருகி வருகிறது. டேட்டிங் தளங்களில் உண்மையான காதலை தேடி அலைவது முட்டாள்தனம் என்கின்றனர்.

ப்ரேக் - அப்

முன்பு ப்ரேக்-அப் என்பது பெரிய வலி. ஒரு நீண்ட ஆலோசனைக்கு பிறகு, இனிமேல் அவன்/ அவளுடன் உறவில் இருப்பது என்பது ஆகாத காரியம், இது சரிப்பட்டு வராது என்பதை... பல வாய்ப்புகள் அளித்து அது வீணான பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. ப்ரேக்-அப் செய்த பிறகும் கூட அந்த காதலை மறக்க முடியாமல் மாதங்கள், வருடங்கள் வலியுடன் கழித்த காதல் உள்ளங்கள் ஏராளம்.

ஆனால், இன்றோ! ப்ரேக்-அப்பான அடுத்த சில மணி நேரங்களில் ஒரு டேட்டிங் ஆப் இன்ஸ்டால் செய்து சில பெண்களை ஸ்வைப் செய்து பேச துவங்கிவிடுகிறார்கள். உங்கள் மனதுக்குள் ப்ரேக்-அப் ஒரு வலியோ, காயமோ ஏற்படுத்தவில்லை எனில், அந்த உறவுக்கு பெயர் எப்படி காதலாக இருந்திருக்க கூடும்.
  
முகம் பார்த்து பழகுவது

டேட்டிங் தளங்கள், செயலிகளில் அழகாக தெரியும் எடிட்டிங் செய்யப்பட்ட மற்றும் ஃபில்டர் சேர்க்கப்பட்ட படங்களை கண்டும் அவர்கள் காப்பியடித்து ஈர்ப்பாக எழுதியிருக்கும் வாசகங்களைக் கொண்டும் ஏற்பது மற்றும் மறுக்கும் முடிவுகளுக்கு வருவது ஏற்புடையதா ஒருவரை அவரது மனதை அறிந்துக் கொள்ளாமல் நிராகரித்தும், ஆதரித்தும் பழகுவது உறவே அல்ல - வெளிக் கவர்ச்சியில் மயங்கும் விட்டில் பூச்சிகள்.