Asianet News TamilAsianet News Tamil

என்கவுண்டருக்கு நயன்தாரா வரவேற்பு தந்தது ஏன் தெரியுமா..?

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர், நான்கு காம கொடூரர்களால், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவருடைய உடலுக்கு தீ வைத்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
 

actress nayantara welcomes telangana police encounter matter
Author
Chennai, First Published Dec 7, 2019, 6:00 PM IST

எனக்கவுண்டருக்கு நயன்தாரா வரவேற்பு தந்தது ஏன் தெரியுமா..? 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றாலே ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப விருப்பமான நடிகை. மிக சிறந்த நடிகையான நடிகை நயன்தாரா அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு கருத்தையும் முன் வைக்க மாட்டார். ஆனால் முதன் முறையாக பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர், நான்கு காம கொடூரர்களால், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவருடைய உடலுக்கு தீ வைத்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில், இந்த குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளை போலீசார் நேற்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதிகாரிகளின் இந்த தண்டனைக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா வெளியிட்டு அறிக்கையுயில்,

"சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகி உள்ளது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

actress nayantara welcomes telangana police encounter matter

காட்டுமிராண்டித்தனமான சட்டத்திற்கு புறம்பாக பெண்மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதில் அளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதநேயமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த  நாளாக குறித்து வைத்துக் கொள்ளலாம். இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயன்தரும். 

அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும்  அன்பு செலுத்துவதும் இரக்கம் கொள்வதும் நல்லது. நீதி கிடைத்திருக்கும் இந்த தருணம் மகிழ்ச்சியே என்றாலும் நாம் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்று தரவேண்டும். பெண்களை மதிப்பவன்' பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக, ஆண்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அழகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போதுதான் நாம் நிம்மதி பெருமூச்சுடன் அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியும்" என தெரிவித்து உள்ளார் 

actress nayantara welcomes telangana police encounter matter

இங்கு நாம் எதை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் ஒரு பெண் இந்த சமூதாயத்தில் ஒரு படி உயர அவள் படும்பாடு சொல்லி மாளாது. ஒரு படி எடுத்து வைத்தால் பல காரணங்களை காட்டி பல படி கீழே தள்ளுவார்கள். அதிலும் பெண் என்றாலே ஒரு போதை பொருள் என தான் இன்றளவும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா அவர் கடந்து வந்த பாதையில் எத்தனை இன்னலைகளை அனுபவித்து இருப்பார்  என்ற சிந்தனையை தூண்டும் அளவிற்கு உள்ளது இந்த அறிக்கை என்றே பலரும் கருத்து  தெரிவித்து உள்ளனர். 

இதன் காரணமாக தான், நயன்தாரா என்கவுன்டருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் என விமர்சனம் எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios