Asianet News TamilAsianet News Tamil

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அஞ்சலி...! கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ரசிகர்கள்...!

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். 

actress anjali maintains her body so slim and changed physically
Author
Chennai, First Published Jan 24, 2020, 6:25 PM IST

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அஞ்சலி...! கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ரசிகர்கள்...! 

தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. 

actress anjali maintains her body so slim and changed physically

அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்", "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம செலுத்தி வந்தார். 

actress anjali maintains her body so slim and changed physically

சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது. அதனால் உடல் எடையைக் குறைக்க தீர்மானித்த அஞ்சலி, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். 

actress anjali maintains her body so slim and changed physically

தற்போது பார்ப்பதற்கு நச்சுன்னு ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள அஞ்சலி விதவிதமான மார்டன் உடைகளில் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது ஓவராக இளைத்து மீண்டும் கற்றது தமிழ் லுக்கிற்கு மாறியுள்ள அஞ்சலியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios