நடிகர் சூரி செய்த தரமான சம்பவம்! புகழ்ந்து தள்ளும் 350 பேர் குடும்பங்கள்..! 

கொரோனா எதிரொலியால் பல சேவைகள் முடங்கி உள்ள நிலையில் மதுரையில் தான் நடத்தி வந்த உணவகத்தையும் மூடி உள்ளார் சூரி. இவரது உணவகத்தில் வேலை செய்யும் 350 தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுத்து எந்த பிடித்தமும் இல்லாமல் மாத சம்பளத்தை முழுமையாக கொடுத்து உள்ளார் 

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சூரி.இவர் நடிகர் சந்தானத்திற்கு அடுத்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். நகைச்சுவை நடிகர்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் தனி மாஸ் தான்.

நடிகர் சூரியும் அப்படிதான். இது ஒரு பக்கம் இருக்க, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திரையில் நிலைத்து  இருக்க முடியும் என்பதனை உணர்ந்த சூரி தனக்கென ஒரு பிசினஸை தொடங்கினார். அதுதான் உணவகம்.   

இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி தெரிவிக்கும் போது,“மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல் எப்போதுமே ஓடிக்கொண்டே இருந்தேன். இப்போதுதான் மனைவி குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி பேச முடிகிறது. வீட்டுவேலை எல்லாம் செய்கிறேன். குழந்தைகளுடன் விளையாடுவது...சொல்லிக்கொடுப்பது  என எனது நேரம் செல்கிறது. ஊரில் உள்ள உறவினர்களிடம் தொலைபேசியில் பேசி மகிழ்கிறேன். அவர்களிடம்  பாதுகாப்பாய் இருக்கும் படிகேட்கிறேன் 

தற்போது தான்  நடத்தி வரும் உணவகத்தில் மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன். அவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன். இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன்" என தெரிவித்து உள்ளார் 

மேலும் கொரோனா பயம் 3 ஆவது உலகப்போர் வந்த மாதிரியான ஒரு  சூழலை உருவாக்கி உள்ளது.எனக்கு இது பயம் கலந்த ஓய்வு என தெரிவித்து உள்ளார் சூரி. நடிகர் சூரியின் இந்த செயலால், அவரது ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் சூரிக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்