பிரதமர்: "மக்களே உதவுங்கள்"..! அடுத்த நிமிடமே ₹25 கோடியை வழங்கிய "நடிகர் அக்ஷய்"! 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க, மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லாமல் உள்ளது.

இந்த ஒரு நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தங்களால் இயன்ற நிதியுதவியை கொடுத்து உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் படி ...PM CARES 2121PM20202 என்ற கணக்கில் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற சிறிய நிதியுதவி அளித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்,பேரிடர் போன்ற காலத்தில் கண்டிப்பாக இந்த நிதி கட்டாயம் பேருதவியாக இருக்கும்.

எதிர்காலத்தில் இது போன்று ஏற்படும் எந்த ஒரு துன்ப காலத்திலும் மக்களை காப்பாற்ற இந்த நிதி மிக முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் 

PM CARES 

STATE BANK OF INDIA

BRANCH : NEW DELHI

IFSE CODE: SBIN0000691

பிரதமரின் கோரிக்கையை ஏற்று தற்போது...ஐ.ஏ.எஸ் சங்கம் சார்பில் 21 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பிரதமரின் வேண்டுகோளை அடுத்து நடிகர் அக்‌ஷய் குமார் தனது சொந்த நிதியிலிருந்து ₹25 கோடியை PM CARES வங்கி கணக்கிற்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று அடுத்தடுத்து அதிக நபர்கள் நிதி உதவி அளித்து நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க  உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.