Asianet News TamilAsianet News Tamil

ரூ.12 லட்சம் செலவில் செய்ய வேண்டிய சிகிச்சையை இலவசமாக செய்து சாதனை... அரசு மருத்துவமனையை இலக்காரமாக நினைக்காதீர்கள்..!

பட்டுக்கோட்டையில் கடுமையான வயிற்று காரணமாக 12 வயது சிறுவன் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரன் பரிசோதித்தார். அந்த பரிசோதனையில் சிறுவனுக்கு வயிறு வீங்கி இருந்தது, இதய துடிப்பு மிக அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நீர்சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் இருந்துள்ளான்.

Achievement of free treatment for a cost of Rs 12 lakh...Government Hospital doctor
Author
Thanjavur, First Published Jan 11, 2020, 6:47 PM IST

12 வயது சிறுவன் கடுமையான வயிற்று வலிக்காக பட்டுக்கோட்டையில் இருந்து அனுப்பி இருந்தார்கள் எங்கள் தஞ்சாவூர் அரசு ருத்துவமனைக்கு 

பட்டுக்கோட்டையில் கடுமையான வயிற்று காரணமாக 12 வயது சிறுவன் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரன் பரிசோதித்தார். அந்த பரிசோதனையில் சிறுவனுக்கு வயிறு வீங்கி இருந்தது, இதய துடிப்பு மிக அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நீர்சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் இருந்துள்ளான்.

Achievement of free treatment for a cost of Rs 12 lakh...Government Hospital doctor

இந்நிலையில், உடனே அவனுக்கு நரம்பு வழியாக க்ளுகோஸும் ஆன்டி பையோட்டிக் மருந்தும் செலுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக வயிறு வீங்கி போனது ஸ்கேன் எடுத்ததில் குடல் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஸ்கேன் ரிப்போர்ட்டி இப்படி எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து, சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. சிறுவனின் வயிற்றை கிழித்தவுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்ததுள்ளது கண்டு மருத்துவர் ராஜேந்திரன் அடைந்தார்.

Achievement of free treatment for a cost of Rs 12 lakh...Government Hospital doctor

பின்னர், சிறு குடல் 100 செ.மீட்டர் அழுகி இருந்தது. இதனையடுத்து, அழுகிய குடலை வெட்டி எடுத்து விட்டு , சிறு குடலையும் பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குடல் அழுகியது தொடர்பாக ஆய்வு செய்தபோது வாழ்வுலஸ் என்று கண்டுபிடித்த மருத்துவர்கள், அப்படியென்றால் ரத்த ஓட்டம் தடை பட்டு குடல் அழுகி போவது என்று அர்த்தம். சிறுவனுக்கு இறுவை சிகிச்சையால் அரங்கம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. 

Achievement of free treatment for a cost of Rs 12 lakh...Government Hospital doctor

குடல் அறுவை சிகிச்சை செய்தால் 5 நாட்களுக்கு உணவு கிடையாது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு இரவு பகலாக பயிற்சி மருத்துவர் மற்றும் செவிலியர்களும் கவனித்து கொண்டனர். மெதுவாக உடல் தேறியது 6-வது நாள் காத்து தையல் பிரிந்த பிறகு தண்ணியும் இளநீரும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆரம்பித்தோம். சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால், வயிற்று போக்கு ஏற்பட்டு மிக சிரமம் ஏற்பட்டது. திடீரென யாரும் எதிர்பாராத விதமாக 11-வது நாள் தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது. உள்ளே தைத்து வைத்த குடல் தையல் விட்டு போயுடுச்சுனு அர்த்தம் மலம் வயிற்று மேலே வருவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி அழுதார். 

பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்பு மூலம் சத்து மருந்து, மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ நரம்பு மருந்துகள் செலுத்தியதில், தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒரு கட்டத்தில் நார்மலாக மலம் கழிக்க ஆரம்பித்தான். உடல் தேறி இன்று வீட்டுக்கு போறான் தம்பி இது மறுபிறவி இவனுக்கு கிட்டத்தட்ட 25 நாட்கள் எங்கள் வார்டில் இருந்துள்ளான். 

Achievement of free treatment for a cost of Rs 12 lakh...Government Hospital doctor

இவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்ச ரூபாய் இருக்கும். ஆனால், இத்தகைய மருத்துவம் முற்றிலுமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை அளித்த தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios