பாராசூட்டில் பறக்கும் போது மாட்டிக்கொண்ட இளைஞர்..! பிறகு நடந்ததை நீங்களே பாருங்கள்..! 

ஆஸ்திரியாவில் இருந்து ஸ்கை டைவிங் குழு நிகழ்ச்சி ஒன்றிற்காக தாய்லாந்து நாட்டுக்கு வந்து  உள்ளது. இந்த குழுவை சேர்ந்த ஒருவர் தன்  காதலி உடன் சென்று இருந்தார். அப்போது  எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. 

வீரர் ஜோஹன்ஸ் கிராசர் காதலியுடன் பட்டாலுங் மாகாணத்தில் உள்ள Khao Ok Talu என்ற மலைக்குச் சென்று பாராசூட்டில் குதித்த போது காற்றின் வேகம் காரணமாக செங்குத்தான  பாறையில் சிக்கி கொண்டார். அதாவது தரையில் இருந்து 820 அடி உயரத்தில் தொங்கியவாறு 8 மணி நேரம் போராடி உள்ளார். அவருடைய காதலி, காதலனுக்கு தொடர்ந்து நம்பிக்கை கொடுத்த வண்ணம் இருந்துள்ளார். 

பின்னர் மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனாலும் காற்று அதிகமாக வீசியதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தோல்வி அடைந்தது. பின்னர் ஒரு வழியாக கயிறு மூலம் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்ககப்பட்டு வருகிறது.