பிரபல நடிகருக்கு அடி-உதை..! சென்னை நீலாங்கரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! 

கொரோனா பாதிப்பு பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்றளவும் ஒரு சிலர் வெளியில் தேவை இல்லாமல் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக இவர்கள் மூலமாகவே மிக எளிதாக மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

இந்த ஒரு நிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரை என்ற பகுதியில் உள்ள பனையூரில் வசித்து வரும் நடிகர் ரியாஸ்கான் நேற்று காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு பெண் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கூட்டமாக நின்று பேசிக்கொண்டு அங்குமிங்குமாக திரிந்து இருக்கின்றனர். இதை கண்ட ரியாஸ்கான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தானே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கூட்டம் கூட கூடாது என அரசு குறிப்பிட்டு இருக்கிறது.

இதனை சற்றும் மதிக்காமல் நோய் பாதிப்பு குறித்தும் உணராமல் எப்படி தான்தோன்றித்தனமாக கூட்டம் கூடினால் மற்றவர்களுக்கும் ஆபத்து இல்லையா? என கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ரியாஸ்கான் அடித்துள்ளார். இதுகுறித்து கானத்தூர் போலீஸ் காவல் நிலையத்தில் ரியாஸ்கான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு  நிலவியது. 

கொரோனா பரவல் தடுக்க பாமர மக்களும் புரிந்துக்கொண்டு அரசு சொல்வதை கேட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நகரத்தில் வாழக்கூடியவர்களில் சிலர் இவ்வாறு நடந்துக்கொள்வதால் மற்றவர்களுக்கும் எவ்வளவு பிரச்சனை ஏற்படுகிறது என்பதனை புரிந்துகொண்டு நடத்தல் சிறப்பானது