தாலி கட்டிய அடுத்த நொடியே மனைவியை நடு ரோட்டில் விட்டு சென்ற நகராட்சி ஆணையர்..! 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நகராட்சி ஆணையராக உள்ள செல்வா பாலாஜி,தான் காதலித்து வந்த ரோஜாவை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் முடித்த கையோடு இருவரும் பிரிந்து சென்ற விவகாரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குடியாத்தம் நகராட்சி ஆணையாளராக இருப்பவர் செல்வா பாலாஜி.அதே பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர்கள் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ரோஜா செல்வ பாலாஜியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை ரோஜா செல்வா பாலாஜி அலுவலகத்திற்கு சென்று அவரிடம் பேசி உள்ளார். பின்னர் இருவரும் வெளியில் சென்று உள்ளனர். 

அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறு காரணமாக ரோஜா தன் கையை அறுத்துக் கொண்டு உள்ளார். பின்னர் பள்ளிகொண்டாவில் உள்ள பிரபலமான ரங்கநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்த தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் மீதும் மாப்பிள்ளை வீட்டார் பெண் மற்றும் பெண் வீட்டார் மீதும் புகார் கொடுத்து உள்ளனர்.

இது குறித்து இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசிய காவல்துறையினர், பின்னர் அவர்களை வீடு திரும்ப செய்தனர். அப்போது ரோஜாவை அழைத்து செல்லாமல் செல்வபாலாஜி தன்னுடைய காரில் ஏறி சென்றுள்ளார். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.