ஒரு ஆண் எப்போது மனதளவில் முதிர்ச்சி அடைகிறார் என்பது அவர் நடந்துக்கொள்ளும் விதம் மற்றும் சரியான சமயத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளை வைத்தே சொல்லலாம்.

ஆண்களுக்கு பொதுவாக கோபம் அதிகமாக வரும் என சொல்வார்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் கோபத்தை எங்கு அடக்க வேண்டுமோ அந்த சமயத்தில் அடக்கி வைத்துக் கொள்ளும் பக்குவம் எப்போது  வருகிறதோ, அப்போதே தெரிந்துக்கொள்ளலாம் அந்த ஆண் பக்குவம் அடைந்துள்ளார் என்று...

மேலும் மன்னிக்கும் மன நிலை இருந்தால் அதுவும் பக்குவத்திற்கான அறிகுறி....சுயநலம் மட்டுமின்றி பொது நலமாக யோசனை செய்து, அறிவு சார்ந்த விஷயங்களை பற்றி யோசிக்கும் போது, நல்ல நல்ல திட்டங்களுக்காக திறவு கிடைக்கும்.

பெற்றோர்கள் சுய ஒழுக்கம் மற்றும் நல்ல பலகை வழக்கங்கள சொல்லி கொடுத்து வந்திருப்பார்கள்...இதை கற்றுக்கொண்டு வாலிப வயதில் நல்லது எது கெட்டது எது என பிரித்து அறிந்து செயல்படும் தருணம் கூட ஒரு ஆணின் முதிர்ச்சி பற்றி தெரிந்துக்கொள்ள முடியும்.

பருவ வயதில் காதல்

பருவ வயதில் ஒரு ஆணின் காதல் காமம் குறித்த ஆர்வத்தை சார்ந்ததாக இருக்கும். ஆனால் அதற்குண்டான முதிர்வு இருக்கும் போது, காதல் குறித்த பார்வை காமத்திலிருந்து அன்பை சார்ந்ததாக இருக்கும்.

ஒரு பொருளை வாங்கும் போது அது சரியானதா.. தேவையா என ஆராய்ந்து வாங்குவதில் கூட முதிர்வு  தன்மையை உணர முடியும்.
 நண்பர்களிடம்  பழகுவது, ஒரு சில நட்பு வட்டாரத்தை மட்டும் நம்புவது என தனது உறவு முறையில் கூட பார்த்து பார்த்து பழகுவதும் அவர்களது பொறுப்புணர்வை காண்பிக்கும்

ஒரு ஆணுக்குள் ஏதோ ஒரு தேடுதல் ஏற்படும் போது, அவன் வாழ்கை வெற்றி நோக்கி செல்கிறான் என்று  அர்த்தம்.