Asianet News TamilAsianet News Tamil

மகனின் "இறுதிசடங்கை" லைவ் வீடியோவில்பார்த்து கதறிய குடும்பம்!

மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அவருக்கு மஞ்சள் காமாலை உள்ளது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் அந்த ஓட்டலிலேயே தங்கி சில காலம் வேலை செய்து வந்துள்ளார்.

a family watched their sons last office procedure in live video
Author
Chennai, First Published Apr 8, 2020, 10:52 AM IST

மகனின் "இறுதிசடங்கை" லைவ் வீடியோவில்பார்த்து கதறிய குடும்பம்! 

சில நேரங்களில் சில துயரங்களை வார்த்தைகளில் முடியாது. எதிரிக்கும் இப்படி ஒரு கஷ்டம் வந்துவிட கூடாது என நினைக்கும் அளவுக்கு பெரும் துயர சம்பவங்கள் ஒரு சிலர் வாழ்க்கையில் நடக்க தான்  செய்கின்றது.

இதற்கெல்லாம் உதாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் இறந்த தன் மகனின் இறுதி சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்க்கும் துயர சம்பவம் நடந்து உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிம் டேகா என்ற மாவட்டத்தில் வசித்து வருபவர் அர்ஜுன்(21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவா சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

a family watched their sons last office procedure in live video

மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அவருக்கு மஞ்சள் காமாலை உள்ளது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் அந்த ஓட்டலிலேயே தங்கி சில காலம் வேலை செய்து வந்துள்ளார். இந்த ஒரு நிலையில் மஞ்சள் காமாலை முற்றிய உடன் அவருடைய நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அவரது உடலை கோவாவில் இருந்து மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.

எனவே அவரது நண்பர்கள் கோவிலிலேயே இறுதி சடங்கை செய்ய முடிவு செய்தனர். இதனை அவர்களது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி இறுதிச் சடங்கின்போது வீடியோ கால் செய்து காண்பித்தனர். இதனைப் பார்த்த அவரது குடும்பம் கதறி அழுதது. அதன் பின்னர் அர்ஜுனனின் ஆடைகளை அவர்களது குடும்ப முறைப்படி வீட்டின் நிலத்தில் புதைத்து உள்ளனர். இதுகுறித்து அவருடைய தந்தை தெரிவிக்கும்போது என்னுடைய துயரத்தை என்னால் வெளிப்படுத்தவே முடியவில்லை என மிகவும் துன்புற்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios