காதல் எப்போதும் அழகானதுதான். காதலித்தாலும், காதலிக்கப்பட்டாலும், தன் அன்புக் காதலை காதலியிடம் சொன்னாலும், அல்லது சொல்லாமல் மனதுக்குள் வைத்து காதலியை பார்த்துக்கொண்டிருந்தால் கூட அது அழகுதான்.

காதலைச் சொன்ன தருணம், கடவுளைக் கண்ட கணமே என்று அழகான பாடல் வரிகள்கூட இருக்கின்றன. காதல் மனிதர்களை ஈரமுள்ளவர்களாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை, அது உணர்வுப்பூர்வமானது என்பதை சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடெமியில் கடந்த 8-ம் ேததி பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.  

சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி முடிந்து செல்லும பாஸிங் அவுட் பரேடில், தனது நீண்டகாலத் தோழியிடம் காதலைச் சொன்ன ராணுவ அதிகாரியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் கடந்த 8-ம் தேதி ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடெமியில் பயிற்சி முடிந்து பாஸிங் அவுட் பரேட் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ராணுவ அதிகாரி தாக்கூர் சந்த்ரேஷ் சிங்(வயது25) தனது 3 ஆண்டு பெண் தோழி தாரா மேத்தாவிடம் காதலைக் கூறியதுதான் அனைத்திலும் சிறப்பாகும்.

இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப்படித்துள்ளனர். படிப்பு முடித்தவுடன் சந்திரேஷ் சிங் ராணுவ அகாடெமி தேர்வு எழுதி பயிற்சிக்கு வந்துவிட்டார். ஆனால், தாரா மேத்தாவை ஒர தலையாக காதலித்துவந்தார். தன்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு, தனது குடும்பத்தாரையும் தாரா மேத்தாவையும் அழைத்திருந்தார். பதவி ஏற்பு விழா முடிந்ததும், தரா ேமத்தாவை தனியாக அழைத்துச் சென்ற சந்த்ரேஷ் சிங் முழங்காலிட்டு தாராவின் கையைப் பிடித்து தனது காதலைக் கூறினார். இதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்த தாரா மேத்தா மறுவார்த்தை பேசாமல் வெட்கத்தால் வசப்பட்டு காதலை ஏற்றுக்கொண்டா். வெட்கத்தால் நானி, சந்த்ரேஷ் மார்பில் சாய்ந்துகொண்டார்.

இந்த புகைப்படங்களை இருவரும் இன்ஸ்ட்ராகிராமில் பதவிட்டிருந்தனர். இதற்கு ஏ ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் கிைடத்தன.

இது குறித்து ராணுவ அதிகாரி சந்த்ரேஷ்சிங் கூறுகையில், நான் ராணுவ அதிகாரி பயிற்சி அகாடெமியில் சேர்ந்தபோதே, என்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு என் குடும்பத்தாரோடு சேர்ந்து தாராவையும் அழைக்க திட்டமிட்டேன். அதன்படி தாரா வந்திருந்தார். ஏற்கனவே தாரா குறித்து என் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டேன். அவர்களும்சம்மதம் தெரிவித்தனர்.

கல்லூரியில் இருவருமே வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். முதல் இரு ஆண்டுகள் ஹாய், சொல்லிக்கொண்டோம். 3-வது ஆண்டு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து பல இடங்களுக்கு சென்று பேசினோம். இருவரும் அதிகமான நேரம் செலவிட்டோம். இருவருக்கும் இடையே காதல் இருந்தாலும் தனித்தனி லட்சியத்துக்காக இருவரும் காதலைக் தெரிவிக்கவில்லை. தாராவும் மத்திய அரசு பணியில் சேர்ந்துவிட்டார், நானும் ராணுவ அதிகாரியாகிவிட்டேன்என்பதால், என் காதலைத் தெரிவித்தேன். என் காதலை தாராவும் ஏற்றுக்கொண்டார் எனத் தெரிவித்தார்.