பாலியல் தொல்லை கொடுத்த பிரபல டான்ஸ் மாஸ்டர் கைது..! 11 ஆம் வகுப்பு மாணவி வீட்டுக்கு சென்று கசமுசா..!

தொழிலதிபர் ஒருவரின் பதினோராம் வகுப்பு படிக்கும் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த டான்ஸ் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற 25 வயதாகும் நபர், வளசரவாக்கத்தில் தனியாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதுதவிர ஒருசிலருக்கு வீட்டிற்கே சென்று நடனம் சொல்லிக் கொடுத்தும் வருகிறார்.

அந்த வகையில் சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் 17 வயதுடைய மகளுக்கு நடனம் கற்று கொடுத்து வந்துள்ளார். மாணவி தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒரு நிலையில் டான்ஸ் மாஸ்டரான மணிகண்டன் மாணவிக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் தன்னை காதலிக்குமாறு கேட்டு வந்துள்ளார்.

இதனை அவர் மறுத்து வரவே, பின்னர் பாலியல் தொல்லை கொடுக்கவும் தொடங்கியுள்ளார். இவ்வாறாக கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து உள்ளது. இது பற்றி ஒரு கட்டத்தில் தன்னுடைய தந்தைக்கு சொல்லவே, அவர் மணிகண்டனை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். பின்னர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துபின், இன்ஸ்பெக்டர் யுவராணி போக்கோ சட்டத்தின்கீழ் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.