புதியதாக திருமணம் செய்துக் கொள்ள உள்ள இங்கிலாந்து நாட்டு ஜோடி, புதுவிதமான அறிவிப்பை விடுத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளனர்

அதில், 2016 ஆம் ஆண்டு இறுதியில் பெயரை குறிப்பிடாத இந்த ஜோடிகள் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாகவும், அதன் பின் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

அதில், அவர்களுடைய திருமணம் முடிந்து, முதலிரவு அன்று இரவு வீடியோ எடுக்க கேமரா மேன் தேவை என விளம்பரம் செய்து உள்ளனர்

அதில்,”வாழ்கையில் முதலிரவு என்பது மறக்க முடியாத ஒன்று..அந்த ஒவ்வொரு நிமிடமும் எப்படி செல்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும்...90 நிமிடமுதலிரவு வீடியோ எடுக்க கேமராமேன் தேவை. இதற்காக 2000 பவுண்டு கொடுக்க தயார்.விருப்பம்  உள்ளவர்கள் எங்களை அணுகலாம்..

எங்கள் திருமணத்தை வீடியோ எடுக்கும் கேமராமேனை கேட்டோம். அவர் இதற்கு முன்னதாக  இது போன்று எடுத்தது இல்லை என்று கூறி, தன்னால் முடியாது என  தெரிவித்து விட்டார்.

எங்கள் முதலிரவை வீடியோ எடுப்பது நோக்கமே எங்கள் இருவருக்கும் இடையே உள்ள விஷயம்.. இந்த வீடியோ வேறு யாரோ பார்ப்பதற்கு கிடையாது. நாங்கள் பார்ப்பதற்கு  மட்டுமே தேவை.. எனவே  இதற்காக நம்பிக்கையான நபர் வேண்டும்..அதற்காகத்தான்  இவ்வளவு பணம் கொடுக்க கூட முற்படுகிறோம்”- இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளனர்

இந்த விளம்பரம் உலக அளவில் விவாத நிகழ்வாக மாறி உள்ளது\