Asianet News TamilAsianet News Tamil

கொரொனோ வைரஸ் பெயரை மாற்றினால் 70 கோடி..!! ஐரோப்பிய பீர் கம்பெனி அதிரடி அறிவிப்பு...!!!

கொரோனோ பீர் கம்பெனி ,கொரோனோ என்கிற வார்த்தையை இணையத்தில் மாற்றினால் இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருப்பது ,இணைய வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறது.

70 crores if you change the name of coronavirus virus !! European Beer Company Action Announced ... !!!
Author
Europe, First Published Feb 4, 2020, 10:04 PM IST


கொரோனோ பீர் கம்பெனி ,கொரோனோ என்கிற வார்த்தையை இணையத்தில் மாற்றினால் இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருப்பது ,இணைய வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறது.70 crores if you change the name of coronavirus virus !! European Beer Company Action Announced ... !!!

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தைன்னா அது 'கொரோனா வைரஸ்'னு உலகமே சொல்லும் அளவிற்கு அந்த பெயர் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.இது ஒருபுறம் இருக்க ஐரோப்பிய நாட்டில் உள்ள பிரபல பீர் கம்பெனியின் டிரேடு மார்க்  பெயரும் கொரோனோ தான். உலகத்தில் உள்ளவர்கள் தினந்தோறும் கொரோனோ வைரஸ் என்கிற வார்த்தையை கூகுள் இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அப்படி தேடும் போது கொரொனோ வைரஸ் ,பீர் இந்த இரண்டும் இணைத்தில் காட்டுகிறது. இதனால் கொரொனோ பற்றி தேடும் இணைய வாசிகளுக்கு ஒரே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

70 crores if you change the name of coronavirus virus !! European Beer Company Action Announced ... !!!

ஐரோப்பாவில் உள்ள ஒரு பீர் கம்பெனியின் பெயரும் கொரோனா தான். கொரோனோ வைரஸ் கொடுமைகளை பற்றி படிப்பவர்கள், கொரொனோ பீர் பற்றியும் படித்து வருகிறார்கள். இதனால் கொரொனோ வைரஸ்க்கும் ,பீருக்கும் முடிச்சு போட்டு இதை குடித்தால் கொரொனோ தாக்கும் என்று பரப்பி  வருகிறார்கள். இதனால் அந்த நிறுவனம் தனது பீர் விற்பனையில் பெரும் அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது.

கொரோனா என்பது வைரஸ் அல்லது பீரா? என்ற குழப்பம் நெட்டிசன்கள் இடையே இருந்து வருகிறது.  எதார்த்தமாக கொரோனோ என்கிற பெயர் அமைந்தாலும்  கொரோனோ வைரஸ் ,கொரோனோ பீரையும் விட்டு வைக்கவில்லை, அதையும் தாக்கி அதன் விற்பனையையும் அட்டாக் செய்து இருக்கிறது. இதனால் அந்த நிறுவனம் தனது கொரொனோ பீர் விற்பனை குறைந்துள்ளதாகவும், கொரொனோ என்கிற பெயரால் தனது பிராண்ட் பீர் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் அடைந்துள்ளது. 

70 crores if you change the name of coronavirus virus !! European Beer Company Action Announced ... !!!

இது குறித்து கொரோனோ பீர் கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில்.." எங்கள் கம்பெனி  கொரோனோ பீர்க்கும்,வைரஸ் கொரொனோவுக்கும் சம்மந்தம் இல்லை. கொரொனோ பெயரை மாற்றினால் இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய் தருவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா தான் “கொரோனா பீர் வைரஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடாகவும் விளங்குகிறது. ஃபாக்ஸ்' செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கூகுள் ட்ரெண்ட்ஸ் அளித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக “கொரோனா பீர் வைரஸ்” என்ற வார்த்தை அதிக முறை தேடப்பட்டுள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.

T Balamurukan
 

Follow Us:
Download App:
  • android
  • ios