திருமணம் முடிந்த பிறகு முதலிரவுக்கு செல்லும் கன்னிப்பெண்களின் மனம் எப்போதும் குழப்பத்துடனேயே இருக்கும்.(ஏற்கனவே செக்ஸ் அனுபவம் இருந்தால் பெரிய அளவில் குழப்பம்இருக்காது). 

ஆனால் கன்னிப் பெண்களுக்கு முதலிரவு என்றாலேசிறிது தயக்கமும், பயமும் கூட இருக்கும். ஏனென்றால் உடல் உறவின் போது ரத்தம் வருமா? முதலில் யார் துவங்குது? அவர் என்னென்ன எதிர்பார்ப்பார்? என்பன போன்ற பல கேள்விகள் முதலிரவுக்கு செல்லும் கன்னிப் பெண்களிடம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். 

எனவே திருமணமான கன்னிப் பெண்கள் முதலிரவை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான டிப்ஸ்கள் இதோ..

1. முதலிரவு என்றால் செக்ஸ் மட்டுமே கிடையாது முதலிரவு என்றால் செக்ஸ் என்கிற எண்ணம் நம் மனதிற்குள் ஆழமானதற்கு காரணம் சினிமா. ஆனால் முதலிரவில் அனைவருமே செக்ஸ் வைத்துக் கொள்வார்களா என்றால் இல்லை. ஆனால் சின்ன சின்ன காதல் வளர்ப்புகள், முன் விளையாட்டுகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அதற்கு தயாராக பெண்கள் முதலிரவுக்கு செல்லலாம். செக்ஸ் இருந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றாலும் பெண்கள் அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2. மன அமைதி முக்கியம் முதலிரவை எதிர்கொள்ளும் பெண் மன அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் மன அமைதி இருக்குமாயின் முதலிரவை எளிதாக எதிர்கொள்ள முடியும். மனம் அமைதியாக இருந்தால் உடல் அமைதியாக இருக்கும். இரண்டுமே அமைதியாக இருந்தால் முதலிரவு இனிமையாக அமையும். 

3. எதுவுமே அசிங்கம் இல்லை; உடலுறவு என்று வந்துவிட்ட பிறகு எதுவுமே அசிங்கம் இல்லை என்கிற மனநிலை அவசியம். முதல்முறையாக உடலுறவு மேற்கொள்ளும் போது எந்த அளவிற்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதே அளவிற்கு சில தர்மசங்கடங்கள் ஏற்படும். சிலவற்றை அறுவெறுப்பாக கூட பெண்கள் நினைக்கலாம். ஆனால்
அவைகள்அனைத்தும் போகப்போக சரியாகிவிடும். செக்சில் அசிங்கம் என்று எதுவும் இல்லை.

4. கன்னிப்பெண்ணாக இருந்தாலும் ரத்தம் வராத  முதலிரவின் போது கன்னிப் பெண்ணாக இருந்தால் ரகசிய உறுப்பில் இருந்து ரத்தம் வரும் என்பது மூட நம்பிக்கை. பெண்களுக்கு ரகசிய உறுப்பில் கன்னித்திரை என்று ஒன்று இருக்கும். இது செக்சின் போது மட்டுமே உடைந்து ரத்தம் வரும் என்பது தவறான நம்பிக்கை. பெண்கள் சைக்கிள் ஓட்டும் போது,
தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் போது என பல்வேறு தருணங்களில் கன்னித்திரை உடைய வாய்ப்பு இருக்கிறது. எனவே முதலிரவில் ரத்தம் வரவில்லை என்றால் பெண்கள் பதற்றப்பட வேண்டியது இல்லை. 

5. முதல் செக்சில் சிறிய அளவில் வலி இருக்கும்

முதலிரவின் போது தான் நீங்கள் முதன் முறையாக செக்சைஎதிர்கொள்கிறீர்கள் என்றால் சிறிய அளவில் வலியை எதிர்கொள்ளவும் தயாராகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் முன்விளையாட்டுகள் தித்திப்பாக இருக்கும் நிலையில் உச்சகட்டத்தை அடைய வேண்டும் என்றால் துவக்கத்தில் சிறிய வலி இருக்கும். ஆனால் உங்கள் கணவரின் அரவணைப்பு அந்த வலியை இல்லாமல் கூட செய்துவிடலாம்.