Asianet News TamilAsianet News Tamil

4770 பேர் பலி ! என்ன ஒரு கொடுமை! " பிணங்களை மூட ஒரு லட்சம் பை-களை இப்பவே ஆர்டர் செய்த அமெரிக்கா!

அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில் தொடர்ந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் சடலங்களை மருத்துவமனைகளில் வைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. 

4770 persons died due to corona in america and they have ordered 1 lakh bags to cover body
Author
Chennai, First Published Apr 2, 2020, 4:28 PM IST

4770 பேர் பலி ! என்ன ஒரு கொடுமை! " பிணங்களை மூட ஒரு லட்சம் பை-களை இப்பவே ஆர்டர் செய்த அமெரிக்கா!

கொரோனாவால் அமெரிக்காவில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஒரு லட்சம் "பை"களை ஆர்டர் செய்து உள்ளது அமெரிக்க ராணுவம்.

அமெரிக்காவில் மின்னல் வேகத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 770 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டுமே 884 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இருக்க கூடிய சூழ்நிலையில் 90% பேர் வீட்டுக்குள்ளேயே மக்கள் அடைபட்டு உள்ளனர்.4770 persons died due to corona in america and they have ordered 1 lakh bags to cover body

 

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில் தொடர்ந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் சடலங்களை மருத்துவமனைகளில் வைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. பிணங்களின் எண்ணிக்கை குவிந்து வருவதால் அனைத்து சடகிடங்குகளும் நிரம்பியுள்ளது.

நியூயார்க்,கலிபோர்னியா போன்ற இடங்களில் நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களை அனுமதிக்க கூட மருத்துவமனையில் இடமில்லாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் மட்டும் 1139 பேர் பலியாகி உள்ளனர். பொதுவாகவே அங்கு இறந்தவர்களின் உடல் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் வைத்து அதன் பிறகே சவப்பெட்டியில் வைப்பது வழக்கம். இப்போது பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிளாஸ்டிக் பைகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

4770 persons died due to corona in america and they have ordered 1 lakh bags to cover body

இதன் காரணமாக அமெரிக்க ராணுவம் ஒரு லட்சம் "பை"களுக்கு ஆர்டர் கொடுத்து உள்ளது என தெரிவித்து உள்ளது. இது தவிர மேலும் ஒரு லட்சம் "பை"கள் ஆர்டர் கொடுக்க வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளிலேயே வல்லரசு நாடாக கருதப்பட்ட அமெரிக்காவில் தற்போது பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் சீனா அந்நாட்டில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை குறைவாக காண்பித்து உள்ளது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். எனவே சீனா விஷயத்தில் தனக்கு சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios