Asianet News TamilAsianet News Tamil

இந்த 4 விஷயத்தை பண்ணாமல் இருந்தால் "ஆண்மை குறைவு" பிரச்சனை வராதுங்க ...!

முதலாவதாக... சிக்கன். சிக்கனில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. அதனை ஒரு முறை சமைத்து விட்டு மீண்டும் சூடு படுத்தி உண்டால் மேலும் அதிகப் புரதம் உருவாகி ஆண்மைக் குறைவு ஏற்பட மிக முக்கியக் காரணமாக அமைந்துவிடும்.

4 things need to avoid for impotence issues
Author
Chennai, First Published Nov 28, 2019, 6:41 PM IST

இந்த 4 விஷயத்தை பண்ணாமல் இருந்தால் "ஆண்மை குறைவு" பிரச்சனை வராதுங்க ...!  

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஆண்மை குறைவு என்று சொல்லலாம். இதற்காக பல பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் விதமாக எத்தனையோ பேர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் கூட அதிலும் முன்னேற்றம் இல்லாமல் ஒரு விதமான மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இப்படி ஒரு நிலையில் உணவே மருந்து என்ற ஒரு விஷயத்தை நாம் மறக்காமல் பின்பற்றினால் நாம் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்க வாய்ப்பு உண்டு.

4 things need to avoid for impotence issues

அதன்படி குறிப்பாக ஒரு நான்கு உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனை தவிர்த்தாலே போதுமானது. ஆண்மை குறைவுக்கு பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளலாம். முதலாவதாக.. சிக்கன். சிக்கனில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. அதனை ஒரு முறை சமைத்து விட்டு மீண்டும் சூடு படுத்தி உண்டால் மேலும் அதிகப் புரதம் உருவாகி ஆண்மைக் குறைவு ஏற்பட மிக முக்கியக் காரணமாக அமைந்துவிடும்.

4 things need to avoid for impotence issues

அதேப்போன்று கீரையில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் அதிகம் உள்ளது. இதனை மேலும் ஒரு முறை சூடுபடுத்தி உண்பதால் அதில் உள்ள நைட்ரேட் அதிகமாகி புற்றுநோயை ஏற்படுத்துகிறது. முட்டையில் அதிக சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ஒரு முறை வேக வைத்து விட்டு அதன் ஓடுகளை எடுக்க மறந்து பின் மீண்டும் சூடாக உண்ண வேண்டும் என்பதற்காக சூடுபடுத்தி எடுத்துக்கொண்டால் பல விதமான கெடுதல் ஏற்படலாம்.

உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் போன்ற உணவு வகைகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடவே கூடாது. இவ்வாறு உண்பதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே இந்த 4 விஷயங்களை தவிர்த்து வந்தாலே போதும். ஆண்மை குறைவு பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றே சொல்லலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios