துடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்..!  மதுரையில்  பரபரப்பு..! மோசமான நிலையில் 10 பசுக்கள்..?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது செட்டியபட்டி என்ற ஊர். இங்கு உள்ள நடு பட்டியை சேர்ந்தவர் மனோகரன் என்ற நபர். இவர் காலங்காலமாக மாடு வளர்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவியுடன் சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் 50க்கும் மேற்பட்ட மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். மேலும் பால் கறவை தொழில் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்பாராத சுமார்  10 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதில் பண்ணையில் இருந்து 53 நாடுகளில் 40 மாடுகள் தீயில் சிக்கியது. அதில் 30 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 10 மாடுகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து உள்ளனர். இதுகுறித்து கோட்டாட்சியர் சௌந்தர்யா, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.