செக்ஸ் என்பது ஆண் பெண் இருவர்களுக்கும் திருப்தி தரக்கூடியது. மகிழ்ச்சி தரக்கூடியது. உற்சாகம் தரக்கூடியது. பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய செக்ஸ் ஒரு வடிகால். இப்படித்தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். செக்ஸ் என்பது உடலின் தேவை, அதனை நாம் கொடுக்கிறோம் என்றும் கருத்திக் கொண்டிருக்கிறோம்.

உண்மை தான் செக்ஸ் என்பது உடலுக்கான தேவை தான். உடல் ஏன் செக்சை தேவை என்று நினைக்கிறது தெரியுமா? செக்ஸ் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் நமது உடல் இயல்பாகவே செக்ஸ் என்றால் ஆர்வம் ஆகிவிடுகிறது. சீரான இடைவெளியில் ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக் கொண்டாம் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

1) நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு நோய் ஏற்படுவது என்பது அரிதான ஒன்று. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்றவை அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்பவர்கள் அருகில் கூட வராது. அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை செக்ஸ் வைத்துக் கொண்டால், அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

2) ரத்த அழுத்தம் சீராகும்

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் ரத்த அழுத்தம் என்பது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஆனால் 30 வயதுக்கு மேலும் எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பவர்களை நாம் பார்க்க முடியும். அவர்களிடம் விசாரித்தால் உண்மை புலப்படும். ஆம் அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையோ அல்லது அதற்கு மேற்பட்ட முறையோ செக்ஸ் வைத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். இதனால் தான் அவர்களின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

3) மாரடைப்புக்கு வாய்ப்பு குறையும் 

மிகச்சிறந்த செக்ஸ் வாழ்க்கை உங்களது இதயத்திற்கு மிகச்சிறந்த நன்மை தரக்கூடியது. செக்ஸ் என்பது மனிதர்களின் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரான் போன்ற ஹார்மோன்களை சரியான அளவில் பராமரிக்கும். இந்த இரண்டில் ஏதோ ஒன்று குறையும் போது தான் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும். ஆனால் செக்சின் மற்றொரு மிக முக்கியமான நன்மையே இந்த இரண்டு ஹார்மோன் உற்பத்தியையும் சீராக வைத்திருப்பது தான். எனவே செக்ஸ் அதிகம் வைத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு குறையும்.

4) நன்றாக உறக்கம் வரும்

 இயல்பான இடைவெளியில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு இரவில் நன்றாக உறக்கம் வரும். அதிகாலை சரியான நேரத்திலும் அவர்களுக்கு முழிப்பு வந்துவிடும். இதன் மூலம் பகலில் இவர்கள் எந்தவித சோம்பலும் இன்று தங்கள் வேலையில் ஈடுபட முடியும். 

5) மனஅழுத்தம் நீங்கும்

செக்சில் ஆக்டிவாக இருப்பவர்கள் வாழ்க்கையிலும் ஆக்டிவாக இருப்பார்கள். எதையும் இயல்பாக கடந்து செல்லும் மனநிலை இவர்களுக்கு இருக்கும். இதற்கு காரணம் செக்ஸ் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் தன்னம்பிக்கை தான். அடிக்கடி செக்ஸ் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இவர்களை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்கிறது. எனவே தான் இவர்கள் மன அழுத்தம் இன்றி எப்போதும் துடிப்புடன் இருக்கிறார்கள்.