அடுத்த அதிர்ச்சி: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 716 ஆக இருந்தது.தமிழகத்தில் மட்டும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது .

இந்த நிலையில் சென்னையில் மேலும் இருவருக்கு கொரானா உறுதியாகியுள்ளது. இதன் மூலம்  தமிழ்நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இருவரும் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது 

அதில் ஒருவர் லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர், 65 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. தற்போது இவர்கள் இருவரையும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால் இவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்றுதலை தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலே மிக விரைவில்  கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு நம்புகிறது. அதே வேளையில் மக்களுக்கு தேவையான அனைத்தும் எந்த சிரமமும் இல்லாமல் கிடைக்க அரசு நன்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களாகிய நாம்  கொரோனா பரவாமல் தடுக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது