250 கிலோ எடை..! போலீஸ் வாகனத்தில் ஏற்ற முடியாததால்  "சரக்கு வாகனத்தில்" கைது செய்து  அழைத்து செல்லப்பட்ட ஐ.எஸ் மதபோதகர்...! 

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மத போதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சரக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். 

ஈராக்கில் அதிக உடல் எடை(250 கிலோ) கொண்ட ஐஎஸ் மத போதகர் Jabba The Jihadi, அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். 

அதில் ஈராக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு எதிராக சவால் விடும் வகையில் பேசியும் ஐஎஸ் அமைப்புக்கு கட்டுப்படாத முஸ்லிம் மத தலைவர்களை கொலை செய்ய வேண்டும் என ஐஎஸ் அமைப்பினருக்கு கட்டளையிட்டு வீடியோ வெளியிட்டு வந்தார்

இந்த நிலையில் மொசூல் என்ற நகரில் தகியிருந்த abba The Jihadi வை ஈராக் படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அவரை உடல் பருமன் காரணமாக போலீஸ் வாகனத்தில் ஏற்ற முடியாததால் சிறிய வகை சரக்கு வாகனத்தை கொண்டு அழைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது