அடுத்த பீதி..! டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ்...! 

சீனாவின் ஹுவாங்  மாகாணத்தில் தோன்றிய கொரோனா  வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முடியாமல் சீனா பீதியில் உறைந்துள்ளது.  

சீனாவில் திரும்பிய பக்கமெல்லாம் அழுகையும் மரண ஒலமுமாக காட்சியளிக்கிறது . சீனாவில் இருந்து சுமார் 23 க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பினார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

உடனே அவரை தனிமைப்படுத்திய அதிகாரிகள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் , இந்நிலையில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வெளியேற முயன்றதால் அவரை சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

அந்நாட்டின் அதிபர் கிம் தான் அவரை சுட்டுக் கொள்ள உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முதன்முதலில் சீனாவுக்கான எல்லையை மூடியது வட கொரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவில் இருந்து இந்தியா வந்தவர்களில் 17 பேருக்கு கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ளது என தற்போது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் 17 பேரையும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் அந்தந்த மாநில அரசும் மிகவும் கொரோனா விஷயத்தில் மிகவும் கவனமாக உள்ளனர்.