Asianet News TamilAsianet News Tamil

"14 நாட்கள்" கடக்க வேண்டி உள்ளது! எதிர்வரும் சவாலை வெல்வது எப்படி? பாஜக MP ராஜிவ் சந்திரசேகர் அட்டகாச வீடியோ!

சீனாவில் கொரோனா தோன்றினாலும்.. இன்று அதன்  வல்லமையால் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. ஆனால் மற்ற வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,இத்தாலி,ஸ்பெயின் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. 

14 days more to come and how to fight against corona says bjp mp rajeev chandrasekhar
Author
Chennai, First Published Mar 31, 2020, 8:44 PM IST

14 நாட்கள் கடக்க வேண்டி உள்ளது! எதிர்வரும் சவாலை வெல்வது எப்படி? பாஜக MP ராஜிவ் சந்திரசேகர் அட்டகாச வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்திய மக்கள் எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு மக்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் என்ற ஒன்றால் இன்று உலக நாடுகளே அடுத்து என்ன செய்ய போகிறோம் என திணறுகிறது. காரணம்...பொருளாரதார பாதிப்பு மட்டுமல்ல...மனித இனத்திற்கு கொரோனாவால் ஏற்படும் அழிவு மிக பெரிய சவாலாக உள்ளது.

சீனாவில் கொரோனா தோன்றினாலும்.. இன்று அதன் வல்லமையால் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் மற்ற வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,இத்தாலி,ஸ்பெயின் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பெரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இந்த ஒரு தருணத்தில் மக்களாகிய  நாம் எப்படி தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பாஜக எம்பி.ராஜீவ் சந்தரசேகர் விழிப்புணர்வு வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:

இது என்னுடைய 3 ஆவது வீடியோ..! "21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதில்..இன்று 7ஆவது நாள். ஆனால் எனக்கு ஒரு விதமான வருத்தம் உள்ளது. வளர்ந்து வரும் நாடான நம் இந்தியா கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிக்க போகிறோமோ? வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,இத்தாலி,ஸ்பெயின்,கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்தியா எப்படி சமாளிக்க போகிறது ?

 

சார்லஸ் டார்வின் கூற்றுப்படி,

its not the strongest or the most intelligent who will survive but those who can best manage change - charales darwin 

யார் வலிமையானவர்கள் அல்லது புத்திசாலியானவர்கள் என்பதில் அல்ல பொருள். பெரும் மாற்றம் வரும்போது அதனை சமாளித்து போராடி வெற்றி பெறுவதில் உள்ளது நம் வலிமை என தெரிவித்து உள்ளார் 

எனவே நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, கணிக்கமுடியாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனாவிற்கு எதிராக போராடி வெல்ல தயாராவோம்.எனவே அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள் .. அரசு  சொல்வதை கேளுங்கள்.. வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்..21 நாள் ஊரடங்கு உத்தரவில் 7 நாட்கள் முடிந்துவிட்டது. இன்னும்14 நாட்கள் நாம் கடக்க வேண்டி உள்ளது. இந்த 21 நாட்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நாம் பாதுகாப்பாய் இருந்து இந்தியாவை பாதுகாப்போம் "ஜெய் ஹிந்த்" என தெரிவித்து உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios