புதன் பொதுவாக ஒரு ராசியில் இருக்கும் போது அவர்களுக்கு மன நிம்மதி இல்லாமல், நரம்பு பிரச்சனை தொடர்பாக சில அவஸ்தை சந்திக்க நேரிடும். இந்நிலையில் இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சக ராசிக்கு புதன் இடம் பெயர்கிறார். பொதுவாகவே ஒரு ராசியில் புதன் ஒரு மாதம் வரை இருப்பார். ஆனால் இந்த முறை இன்று முதல் ஜனவரி 1 வரை ஒரே ராசியில் இருந்து சஞ்சரிப்பார்.

மேஷம்:

பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். கடன் வாங்க சரியான நேரம், தொழில் வளர்ச்சி இருக்கும், ஊதிய  உயர்வு எதிர்பார்க்கலாம். இவர்கள் பச்சைக்காய்கறிகளை பசுவிற்கு கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.

ரிஷபம்

வீட்டில் தம்பதியினரிடையே சின்னச்சின்ன சண்டை வரும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். காதலை சொல்ல இது ஏற்ற தருணம் அல்ல. உடல் நலனில் அக்கறை  தேவை. புதன்கிழமை மகாவிஷ்ணு கோவிலில் விளக்கேற்றி வழிப்படுவது நல்லது.

மிதுனம் 

தோல் நோய்கள் ஏற்படலாம். பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழும் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது ஆக சிறந்தது.

கடகம்

கல்வித்துறையில் மிகவும் ஆர்வம் காட்டுவீர்கள். புத்திசாலியாக செயல்படுவீர்கள், நண்பர்கள் மற்றும் சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு படிப்பு செலவு அதிகரிக்க செய்யும். மகா விஷ்ணுவை  வணங்கலாம்.

சிம்மம் 

உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கும். வேலைகளில் புரமோஷன் ஏற்படும். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் ஒரு பக்கம் சேரும் இன்னொரு பக்கம் செலவும் அதிகரித்த வண்ணம் இருக்கும். இவர்கள் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை சொல்லி விஷ்ணுவை வணங்குவது நல்லது. 

கன்னி

சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும்...கலைத்துறையில் உள்ளவர்கள் சாதனை செய்வார்கள். வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் பல நன்மைகள் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசியில் இருந்த புதன் இனி ராசிக்கு 2வது இடத்தில், வாக்கு ஸ்தானத்தில் அமர்கிறது. இதனால்  பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சேர்க்கைப இருக்கும். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணைந்தால் நன்மைகள் ஏராளம் 

விருச்சிகம்

தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு ப்ரமோஷனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். சுயமாக தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படும் 

தனுசு 

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க மகா விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்

மகரம் 

வருமானம் அதிகரிக்கும். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. பண வருவாய் அமோகமாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். 

மீனம் 

பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழியில் அதிக உதவிகள் கிடைக்கும். ஒவ்வொரு புதன்கிழமையன்றும் காயத்ரி மந்திரத்தை கூறி வந்தால் எந்த தீமையும் வராது.