12 ராசியினரில் யாருக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உள்ளது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...! 

இன்று உங்களுக்கு தெளிவு பிறக்கும். நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் ஒரு கடிதம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். உங்களது எதிரிகள் மெல்லமெல்ல உங்களை விட்டு விலகுவார்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி கொடுக்கும். உங்களை இதுநாள்வரை தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகி நிற்பார்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரலாம். வருமானம் எதிர்பார்த்தபடி அமையும்.

மிதுன ராசி நேயர்களே..!

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாகனங்கள் தொடர்பாக திடீரென செலவுகள் வைக்கலாம். உதவி செய்த சிலரே உங்களை மதித்து பேசாமல் செல்வதால் மனக்கவலை அடைவீர்கள். இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம்.

கடக ராசி நேயர்களே...!

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க திறனை வளர்த்துக் கொள்வீர்கள்.திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.  

சிம்ம ராசி நேயர்களே..!

உங்களது பகையால் நாளுக்கு நாள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுசரித்து செல்வது நல்லது. இட மாற்றங்கள் குறித்து சிந்திப்பீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...! 

சில அதிரடி முடிவுகளால் ஆச்சரியப்பட வைப்பீர்கள். சாதனை படைத்து மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்குவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள். கல்யாண கனவுகள் நனவாகும். உங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

எண்ணிய காரியம் நிறைவேறும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி அமையும். புதிய பங்குதாரர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

உடன்பிறப்புகள் உங்களுக்கு முன் வந்து உதவி செய்வார்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கனிவான உங்களது பேச்சால் பலரையும் வென்று  விடுவீர்கள் கேட்ட இடத்திலிருந்து உங்களுக்கு உதவி தேடி வரும்.

மகர ராசி நேயர்களே..!

உத்தியோக வாய்ப்புகள் அதிகரிக்கும்.ஆரம்பத்தில் சற்று பின்தங்கி இருந்தாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைவீர்கள். உடல் நலத்தில் அக்கறை காண்பிப்பது நல்லது. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.

கும்பராசி நேயர்களே..!

வரும் நாட்களில் செலவுகள் குறையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மீனராசி நேயர்களே..!

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொலைதூர பயணம் ஒன்றுக்கு திட்டமிடுவீர்கள் வருமானம் போதுமானதாக இருக்கும்.