நாகலாந்தில் வீட்டுக்கு டி.வி. பார்க்க வந்த 15 வயது சிறுமியை கற்பழித்த இளைஞரை தர்மஅடி கொடுத்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

நாகாலாந்து மாநிலம் லாங்லெங்கை சேர்ந்த லாங்யா போம் என்பவர்  தன்னுடைய வீட்டிற்கு டிவி பார்க்க வந்த பக்கத்து தெருவை சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவரை கடந்த 27-ம் தேதி கற்பழித்துள்ளார். இது குறித்து யாரிடமாவது சொன்னால்  கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி  நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவன் அங்கு இல்லை. இதற்கிடையே சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் பெண்கள் அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டது,

இந்நிலையில் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் லாங்யா போமை கண்டுபிடித்த மக்கள் அவனுக்கு தர்ம அடிகொடுத்தனர். அவனது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக இழுத்துவந்தனர்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவனுடைய கழுத்தில் , நான் சிறுமியை பலாத்காரம் செய்தவன் என்ற அறிவிப்பு பதாகையை தொங்கவிடப்பட்டது.

அவனை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து லாங்யா போம்  மீது போலீசார் வழக்கு பதிவு  வழக்குப்பதிவு செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.