லக்னோ : நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் நிலத்தை உழுவதற்கு, மாடுகளுக்கு பதிலாக, தன் இரு மகள்களை விவசாயி பயன்படுத்திவது அதிர்ச்சியை 
ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஜன்சி மாவட்டம் அருகே உள்ள படகான் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆஷிலால் அஹார்வார். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். இதில் 4 பேருக்கு திருமணமாகிவிட்டது. இன்னும் திருமணமாகாமல் 2 மகள்கள்  உள்ளனர். ஒருவர் 8-வகுப்பும், மற்றொருவர் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.  ஆஷிலால் அஹார்வாரின் குடும்பம் கடுமையான வறட்சி மற்றும் பொதுமான மழை இல்லாத காரணத்தால் வறுமையில் வாடுகிறது வாடுகின்றனர்.  ஆஷிலால் உட்பட, அவரது மகள்கள் உடுத்த ஆடை இல்லாமல்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு  அக்கம்பக்கத்தில் உதவி செய்து வருகின்றனர். 

இவர் தனக்கு சொந்தமான நிலத்தை உழுவதற்கு மாடுவாங்க வசதி இல்லாத காரணத்தால், தனது  2 மகள்களை பயன்படுத்தி வருகிறார். இந்த வேலையை, ரவினா, ஷிவானி ஆகியோர் விடுமுறை நாட்களில் செய்து வருகின்றனர். அஹார்வாருக்கு 1 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.