Asianet News TamilAsianet News Tamil

கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி... விசாரணையில் சிக்கிக் கொண்ட பழக்கடை ருத்திரம்மா!

Wife of killing her husband
Wife of killing her husband
Author
First Published May 3, 2018, 10:48 AM IST


கணவனை கொன்று நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார்.

பெங்களூரு குமாரசாமி லே அவுட்டை சேர்ந்தவர் ருத்திரம்மா. ஜெய் நகர் மார்கெட்டில் சொந்தமாக பழக்கடை வைத்திருக்கிறார். இவரது கணவர் கோபால். தமிழகத்தை சேர்ந்த இவர்  கட்டிட வேலை செய்து வந்தார். 19 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கோபால் தினமும் மது அருந்திவிட்டு வருவாராம் இதனால் மனைவி அவரை தட்டிக் கேட்டுள்ளதால் அவரை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், உறவினர் வீட்டிற்கு சென்ற ருத்ரம்மா திங்கட் கிழமை வீட்டிற்கு திரும்பிய அவர் நேற்று அதிகாலையில் அவரது கணவர் மர்மமாக இறந்துள்ளார். அப்போது பார்த்த மனைவி அக்கம் பக்கத்தினை அழைத்து, கணவனை யாரோ கொலை செய்துவிட்டு சென்றிருப்பதாக கதறி அழுதுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கதினர் உடனே குமாரசாமி லே அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார். மனைவி ருத்திரம்மாவிடம் கேட்டுள்ளனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர் மீது சந்கேதம் எழுந்தது.

அவரது நடவடிக்கையை கண்காணித்த போலீசார் நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தனர். அதில் குடிபோதையில் கணவர் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்து வந்ததால், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

கடந்த ஏப்.29ம் தேதி இரவு குடிபோதையில் வந்த கோபால், என்னிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான், சேலையால் என்னுடைய கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி  குழந்தைகளை அங்கிருந்து அழைத்து கொண்டு, சந்தாபுராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து ருத்ரம்மாவை கைது செய்த போலீசார், கொலை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதியின் உத்தரவின் பேரில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios