தாலி கட்டி கூடவே வாழ்ந்த மனைவி மற்றொருவர் மீது காதல் வாய்ப்பட்டால் அதனை கள்ளக்காதல் என்று கூறி, அவரை குடும்பத்தில் இருந்தே ஒதுக்கி விடுவார்கள். 

ஆனால் சற்று வித்தியாசமாக தன்னுடைய மனைவி ஆசைப்பட்ட தன்னுடைய தம்பிக்கே மனைவியை திருமணம் செய்து வைத்துள்ளார் ஒரு கணவர்.

பீகார் மாநிலத்தில், பகல்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பவன் கோஸ்வானி என்கிற நபருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு [பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், பவனின் தம்பி சஜனுடன் பிரியன்ங்காவிற்கு சாதாரணமாக ஏற்பட்ட பழக்கம் பின், காதலாக மாறியது. ஒரு நிலையில் இவருடைய காதல் பவனுக்கு தெரியவந்தது.

தன்னுடைய கணவர் அடுத்து என்ன செய்வார் என பிரியங்கா பயத்துடன் இருந்த நிலையில்,  அவர் சற்றும் எதிர்பாராத ஒரு செயலை செய்தார் பவன். தன்மீது விருப்பம் இல்லாமல் வாழும் மனைவியிடம் இருந்து பிரிய முடிவு செய்தார். அதற்காக முறைப்படி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து விவாகரத்துப் பெற்றார்.

பின் பிரியாங்காவை குடும்பத்தினர் அனைவரிடமும் பேசி தன்னுடைய சகோதரருக்கே திருமணம் செய்து வைத்தார். இது குறித்து அவர் கூறியது "என்னுடயை மனைவியை நான் உண்மையாக நேசித்தேன் அவருக்கு என்னுடன் வாழ விருப்பம் இல்லை என்பதால் நான் அவரிடம் இருந்து விலகுவது தான் நல்லது என கூறி அந்த ஊரை விட்டு வேறு ஒரு ஊருக்கு சென்று விட்டார்". 

தற்போது இவருடைய மனைவி பிரியங்கா பவனின் சகோதரர் சஜனுடன் வாழ்கை நடத்தி வருகிறார். மேலும் தான் உண்மையாக சஜனை தான் காதலிப்பதாக கூறியுள்ளார்.