Asianet News TamilAsianet News Tamil

செல்போனில் அதிக நேரத்தை செலவிடுவது எந்த நாட்டவர் தெரியுமா?

who country spends more time on cell phone
who country spends more time on cell phone
Author
First Published Apr 20, 2018, 3:15 PM IST


உலக நாடுகளில் அதிகபட்சமாக 90% நேரத்தை இந்தியர்கள் மொபைலில் செலவிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இணையதள சேவைகள், சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்களைக் காண்பதே அரிதாகி வருகிறது.

who country spends more time on cell phone

செல்போன்களில் தங்கள் நேரத்தை அதிகளவில் செலவிடுவது குறித்து சர்வதேச நிறுவனமான காம்ஸ்கோர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த ஆய்வில் இந்தியார்கள்தான் அதிகளவில் செல்போன் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 89.87 சதவீதத்தினர் செல்போனில் நேரத்தை செலவழிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியர்களுக்கு அடுத்ததாக இந்தோனேசியா 87 சதவீதமும், மெக்சிகோ 80 சதவீதமும், அர்ஜெண்டினா 77 சதவீதமும் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் போன்களின் குறைவான விலையில் கிடைப்பதுதான். மேலும் டேட்டா கட்டணங்களும் வெகுவாக குறைக்கப்பட்டதுதான் காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

who country spends more time on cell phone

வேலை வாய்ப்பை செல்போன் மூலமும், உடல்நலக் சேவையை டெஸ்க்டாப் மூலமும் இந்தியர்கள் தேடி வருகின்றனர் என்றும், மொத்தத்தில் அதிகமானேர் இணையதளத்தில் விடியோ பார்ப்பதை அதிகம் விரும்புவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தகவல்களைப் பெற விரும்புவோர் 13 சதவீதத்தினர் என்றும் அதற்காக வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தப்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios