திருப்பதி எழுமலையான் கோவிலை பற்றி அடுத்தடுத்த சர்ச்சை வந்துக்கொண்டே இருக்கிறது. இது பற்றி மற்றவர்கள் சொன்னால் கூட, நம்ப முடியாமல் இருக்கலாம் ஆனால் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித் அவர்களே இது பற்றி கூறுகிறார்...

இது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரமண தீத்சிதலு பல்வேறு கேள்விகளுக்கு அதிரடி விளக்கம் அளித்து உள்ளார்.

மைசூர் மகாராஜா கொடுத்த நெக்லஸ்....

மைசூர் மகாராஜா கொடுத்த நெக்லசில் ரோஜா நிறம் வைரம் இருந்தது. 2001 இல்,பக்தர் ஒருவர் வீசிய நாணயத்தால் வைரம் உடைந்துவிட்டதாக  ரெக்கார்ட் செய்து உள்ளனர். பின்னர் அது காணாமால் போய் விட்டது

அதற்கு பின், 2011 – ஜெனிவாவில் ஒரு வைரம் மிக பெரிய தொகைக்கு ஏலம் போனது....அந்த வைரம் கோல்கொண்டா வைர சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என அதில் குறித்து வைக்கப்படிருந்தது. இந்த  வைரம் நவாப்களிடமிருந்து திப்பு சுல்தான் மூலம் மைசூர் மகாராஜா விற்குவந்ததாக நாங்கள் படித்து உள்ளோம்.

 

இந்த வைரத்தை தான் மைசூர் மாகாராஜா திருப்பதி ஏழுமலையானுக்கு பரிசாக கொடுத்து இருந்தார். அந்த வைரம் தான் இப்போது காணாமல் போய்விட்டது....அந்த வைரமும் ஜெனிவாவில் ஏலம் விடப்பட்ட  வைரமும் ஒத்துப்போவதால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறேன் என ரமண தீட்சித் தெரிவித்து உள்ளார்.

இது போன்று பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள ரமண தீட்சித்,மேலும் பல ரகசியங்களை போட்டுடைத்து உள்ளார் ரமண தீட்சித்.