டெல்லியில் இருந்து அஸம்கார் செல்லும் கைபியாத் விரைவு ரயில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  60 பேர் படுகாயமடைந்தனர்.

டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் அஸம்காருக்கு கைபியாத் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் கான்பூர் - எட்டாவா அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது திடீரென சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டது.

ரெயில் என்ஜின் உள்ளிட்ட 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், ஒரு பெட்டி தலைகீழாக கவிழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் 60 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர்  உத்தர பிரதேசத்தின் முசாபர் நகர் அருகே உத்கல் விரைவு ரெயில் விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.