Asianet News TamilAsianet News Tamil

தந்தையின் உயிரை காப்பாற்ற ஆண்களாய் மாறிய இளம்பெண்கள்..!

குடும்ப வறுமை காரணமாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் உயிரை காப்பாற்றவும் இளம்பெண்கள், ஆண் வேடமிட்டு முடிதிருத்த கடையை நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

uttar pradesh sisters runs sick father s barber shop
Author
India, First Published Jan 21, 2019, 6:19 PM IST

குடும்ப வறுமை காரணமாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் உயிரை காப்பாற்றவும் இளம்பெண்கள், ஆண் வேடமிட்டு முடிதிருத்த கடையை நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 uttar pradesh sisters runs sick father s barber shop

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பதினெட்டு வயதான ஜோதி குமாரியும், 16 வயதான நேஹாவும் உடன் பிறந்த சகோதரிகள். இந்த இரு இளம்பெண்களும், ஆண்களை போல் வேடமணிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக முடிதிருத்தம் கடை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர்களது தந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். இதனால் அவர் நடத்தி வந்த முடிதிருத்தும் கடையும் முடங்கிப்போனது. ஜோதிகுமாரி, நேஹாவின் குடும்பத்திற்கு இருந்த ஒரே வருமான மூலம் இந்த முடிதிருத்த கடை. தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவை என்பதால் பெண் என்னும் சமூக அடையாளத்தை மாற்றிக் கொண்டு தந்தையின் முடிதிருத்த கடையினை செயல்படுத்தி வருகின்றனர்.uttar pradesh sisters runs sick father s barber shop

தீபக் மற்றும் ராஜூ என பெயரை மாற்றிக்கொண்டு முடிதிருத்தும் கடையயை நடத்தி வரும் குமாரி, நேஹா குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ’’ இங்கு இருக்கும் 100 குடியிருப்பு வாசிகளுக்கு மட்டுமே இவர்கள் பெண்கள் என்பது தெரியும். வெளியூரில் இருந்து வந்து முடிதிருத்தம் செய்து செல்லும் நபர்களுக்கு இவர்களை ஆண்களாகவே  நினைத்துக் கொண்டுள்ளனர்.  

தினமும் 400- 500 வரை வருமானம் ஈட்டும் இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பிற்பகல் மட்டுமே கடையை நடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் தங்களது படிப்பை தொடர்கிறார்கள்’’ எனக் கூறுகின்றனர். இந்த தகவல் அறிந்த உபி மாநில ஆளுநர் இளம்பெண்களை ஊக்குவித்து பரிசளித்து மகிழ்ந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios