Asianet News TamilAsianet News Tamil

6 ஆயிரத்தை 4,800-ஆக குறைக்கபோகும் நிர்மலா சீதாராமன்... அதிர்ச்சியடை போகும் விவசாயிகள்..!

மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு நாளை மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு, விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 

union budget session 2020...Farmers who go to shock
Author
Delhi, First Published Jan 31, 2020, 6:30 PM IST

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 நிதி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டுக்கு பட்ஜெட்டில் 20 சதவீதம் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு நாளை மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு, விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 

union budget session 2020...Farmers who go to shock

இதற்கிடையில், கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி விவசாயிகளுக்கு 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு 6,000 வழங்கப்படும். இதற்காக 75,000 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தால் 14.5 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தகுதி உடைய விவசாயிகள் அனைவருக்கும் இந்த திட்ட பலன் சென்று சேரவில்லை.

union budget session 2020...Farmers who go to shock

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்;- கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சுமார் 14.5 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் பதிவு செய்தது 9.5 கோடி பேர்தான். அதிலும், 7.5 கோடி பேரின் ஆதார் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளது. ஆதார் சரிபார்ப்புக்கு பிறகுதான், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்படுகிறது. எனவே, நடப்பு ஆண்டில் இந்த திட்டத்துக்கு அரசு ரூ.44,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யும். அதோடு, அடுத்த 2020-21 நிதியாண்டுக்கு இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஏற்கெனவே மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்த 75,000 கோடியில் 20 சதவீதம் குறைத்து 60,000 ஒதுக்கீடு செய்தால் போதும் என வேளாண் அமைச்சகம் கோரியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகள் பற்றிய தகவல்கள் இல்லை. புதிதாக திரட்டி, ஆதார் சரிபார்க்க வேண்டியுள்ளதால் திட்டம் மிக மந்த கதியில்தான் செயல்படுத்தப்படுகிறது என்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios