நான்காம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவிகளை, வகுப்பு ஆசிரியர் கற்பழித்து இருக்கிறார். தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி அறையில், பள்ளி நேரம் முடிந்த பின் இந்த கொடுமையை கற்பழித்து இருக்கிறார். போலீஸ் தற்போது இவரை கைது செய்து இருக்கிறது. இந்த விஷயம் வெளியில் சொல்லாமல் இருக்க ஒரு சிறுமியை அவர் அடித்து கொடுமை படுத்தி உடலுறவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆசிரியர் செய்த இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 மேற்கு வங்காளத்தில் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளும், கடந்த சில நாட்களாக பள்ளி செல்ல முடியாது என்று கூறி பெற்றோர்களிடம் அழுது இருக்கிறார்கள். ஏன் என்று காரணம் கேட்டதற்கு கூறாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு சிறுமி மட்டும், ஆசிரியர், பாலியல் வன்புணர்வு செய்ததை பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.

அதோடு அந்த மாணவிகளை, அந்த 35 வயது ஆசிரியர் அடித்தும் துன்புறுத்தியுள்ளார். தினமும் பள்ளி முடிந்த பின் மாணவிகளை அழைத்து, ஆசிரியர் அறையில் வைத்து நான்கு நாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளனர். இதில் வேறு எந்த ஆசிரியருக்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதில் ஒரு சிறுமி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். பிறப்புறுப்பில் பாதிக்கபட்டுள்ளதாம்.

தற்போது இந்த இரண்டு சிறுமிகளும் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த ஆசிரியருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரிதானதை அடுத்து, மற்ற மாணவிகளின் பெற்றோரார்கள் சேர்ந்து அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். நேற்று இரவு தொடங்கிய போராட்டம் இன்று அதிகாலை வரை தொடர்ந்து நடந்து வந்ததாம். சமீப நாட்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது.

தற்போது 12 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராக மரணதண்டனை வழங்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரபட்டுள்ளதயடுத்து இந்த சட்டத்தின் கீழ் தான் தற்போது அந்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.